சனி, 16 ஜூன், 2018

காஷ்மீர் பத்திரிகையாளர் கொலை..! குற்றவாளிகளின் படத்தை வெளியிட்ட காவல்துறை

காஷ்மீர்vikatan : கார்த்திக்.சி காஷ்மீரின் மூத்தப் பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரியை சுட்டுக் கொன்றவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படங்களை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் பகுதியிலிருந்து `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், புஹாரியை சுட்டவர்கள் என்று சந்தேகப்படுவர்களின் சி.சி.டி.வி கேமரா எடுத்தப் புகைப்படத்தை அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், மூன்று பேர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு பைக்கில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கோணிப்பையில் ஏதோ ஒன்றை மறைத்துவைத்துள்ளான். அந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: