செவ்வாய், 12 ஜூன், 2018

ஏர்செல் மேக்சிஸ் - ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணிநேர விசாரணை

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரத்திடம் இன்று அமலாக்கத்துறை 6 மணிநேர விசாரணை மாலைமலர் : ஏர்செல் மேக்சிஸ் நிதி வழக்கு தொடர்பாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை நடத்தினர். புதுடெல்லி: ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சுமார் 3500 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்திடம் கடந்த 5-ம் தேதி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்திடம் இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

காலை சுமார் 11 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ப.சிதம்பரம் 6 மணிநேர விசாரணைக்கு பின்னர் மாலை 5 மணியளவில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முதன்முறையாக தனக்கு சம்மன் அனுப்பியபோது, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தை அணுகிய ப.சிதம்பரம், இவ்வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்திருந்தார். இவ்வழக்கு தொடர்பாக அவரை கைது செய்ய ஜூலை 10-ம் தேதி வரை தடை விதித்து சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: