வியாழன், 14 ஜூன், 2018

சித்தராமையா : ஊழல் இல்லாத சிறப்பான ஆட்சி வழங்கினேன் .. மக்கள் ஏமாற்றி விட்டார்கள்

வெப்துனியா :மைசூரு : சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை
தேர்தலில், முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். இருப்பினும் வருணா பகுதியில் மகனை வெற்றி அடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சென்றார்.
இதற்கிடையில் மைசூருவில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, மக்கள் என்னை முட்டாளாக்கி விட்டனர். இதுவே போதும். நான் வருணா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். நீங்கள் என்னை தோற்கடித்திருக்க மாட்டீர்கள். 2008 ம் ஆண்டு வருணா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானேன். 2013 ல் முதல்வரானேன். நான் 40 வருடங்களாக அரசியலில் உள்ளேன். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். எதற்காக மக்களும், கட்சி தலைவர்களும் என்னை அந்த தொகுதியில் இருந்து வெளியேற்றினார்கள் என தெரியவில்லை. ஊழல், லஞ்சம் இல்லாத நிலையான அரசை தந்தேன். ஏழை மக்கள் மீதே என் கவனம் இருந்தது. கர்நாடக மக்கள் பசியில் இருந்து விடுபட அன்னபாக்யா திட்டத்தை கொண்டு வந்தேன். 4 கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கினேன்.


ஆனால் இதை எந்த பா.ஜ., ஆளும் மாநிலமும் கொண்டு வரவில்லை. இருந்தும் மக்கள் காங்.,ஐ ஆதரிக்கவில்லை. சிறு சிறு காரணங்களுக்காக மக்கள் என்னை தோற்கடித்து விட்டனர். அம்பேத்கார், இந்திரா போன்ற பெரிய தலைவர்களே மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் தான் என்றார்.

கருத்துகள் இல்லை: