வியாழன், 14 ஜூன், 2018

18 எம் எல் ஏக்கள் வழக்கு நீதிபதிகள் குழப்பம் ...இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றம்!

நக்கீரன்: 18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ தெரிவித்துள்ளார். முன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார்.
 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.< இதன் பின், தகுதி நீக்கம் ஏன் செல்லும்? என விளக்கம் அளித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது, சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: