பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரானார் என்ற தகவல்கள் தொடர்பாக அவருடைய உதவியாளர் விளக்கம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி, நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலம் தவிர்த்து பிற மாநிலங்களில் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளுமாறு வெற்றி எதையும் பதிவு செய்யவில்லை. சமீபத்திய குஜராத் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவிற்கு ஓட்டம் பிடித்தது, போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தும் மிகவும் இக்கட்டான வெற்றி என்பது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிக்கு பிரியங்கா தலைமை ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையானது 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் வெகுவாக எழுந்து வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்களும் பிரியங்கா தலைமை ஏற்பதை விரும்புவதை காணமுடிகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பிரியங்கா காந்தி செயல்பட தொடங்கிவிட்டார் என செய்திகள் வெளியாகியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலைமையில் மாற்றம் என்ற விவகாரத்தை காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் எழுப்பியதாகவும் தகவல்கள் கூறியது. கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தியை செயல் தலைவராக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. பிரியங்காவிற்கு காங்கிரஸில் முக்கிய பதவி ஒதுக்கப்படுகிறது என செய்திகள் வெளியாகி நிலையில் அவருடைய உதவியாளர் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என கூறிஉள்ளார். முற்றிலும் கட்டுக்கதையாகும். இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என பிரியங்காவின் உதவியாளர் பி. சாகாய் பேசிஉள்ளார்.தினத்தந்தி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக