முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாம் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் பிசி.ஜார்ஜ் விரும்புகிறாரா எனப் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை, முதலமைச்சர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மலையாள திரையுலகப் பெண்களுக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள WCC யின் முகநூல் பக்கத்தில் இந்தக் கடிதத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தம்மைப் பற்றி பூஞ்சார் சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ் தொடர்ந்து அவதூறு பேச்சுகளை பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மறுநாளே நடிக்க வந்தவர் என்று விமர்சித்துள்ளதை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நடிகை, பாதிப்புக்குள்ளாகி ஒருவாரகாலம் தனிமையில் இருந்தபோது, சக நடிகர் நடிகையரே ஆறுதல் கூறி தன்னைப் பழைய நிலைக்கு மீட்டு வந்ததாகக் கூறியுள்ளார். தமக்கு ஆதரவாகப் பேசும் பெண்கள் அமைப்பினரையும் தரக்குறைவாக எம்எல்ஏ ஜார்ஜ் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "பாதிக்கப்பட்ட தாம் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா?" என்று அந்தக் கடிதத்தில் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப் குற்றமற்றவர், என்றும் அவரைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகரின் தாய் சரோஜம் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக