மேலூர் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலையில் மதுரை வந்த டி.டி.வி.தினகரன், மாட்டுத்தாவணி அருகே பப்பீஸ் ஹோட்டலில் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து, பெரும் மாநாடு போல மேலூர் பொதுக்கூட்டம் நடைபெறப்போவதாகச் சொன்னவர், 'அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான், 420 என்று சொன்னதில் நான் வருத்தப்படவில்லை' என்று எடப்பாடியையும் அவருடைய ஆதரவு அமைச்சர்களையும் கடுமையாகச் சாடினார்.
அதன்பின்பு, கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜக்கையன், கதிர்காமு, செந்தில்பாலாஜி, வெற்றிவேல், டாக்டர் முத்தையா, சுப்ரமணியன், உமாமகேசுவரி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், மாரியப்ப கென்னடி, ரங்கசாமி, தங்க தமிழ்செல்வன் ஆகிய எம்.எல்.ஏ-க்களும், எம்.பி. நாகராஜும் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது, மதுரை மாநகர, புறநகர் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர். நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் தினகரன் அணியில் சேர்ந்து பணியாற்றப்போவதாக அறிவித்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,ஏ.கே.போஸ்,சென்னை சென்றுவிட்டார். மாலை கூட்டத்தில் இன்னும் பல எம்.எல்.ஏ-க்கள் வருவார்கள் என்கிறார்கள். இன்று மாலை பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடியைப் பற்றியும், ஓ.பி.எஸ்ஸைப் பற்றியும் வெளிவராத தகவல்களைக் கூறுவார் என்று சொல்லப்படுகிறது vikatan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக