தமிழகத்தில் முதலமைச்சரின் ராஜினாமாவை யாரும் கோராதது ஏன்? கமல் கேள்வி
தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதலமைச்சரின் ராஜினாமாவை யாரும் கோராதது ஏன்? என நடிகர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டிய அளவிற்கு குற்றங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதலமைச்சரின் ராஜினாமாவை யாரும் கோராதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழலுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டாமா?
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது. தற்போதுள்ள கட்சிகள் சிரியில்லை எனில் வேறு ஒன்றைத் தேட வேண்டும். எனது இலக்கு சிறப்பான தமிழகம் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக