புதுடில்லி: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் ஓராண்டு அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற வழிவகை செய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீட் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து கூறியிருந்தார்.
இதை ஏற்று, இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.சட்ட வரைவுக்கு சுகாதாரத்துறை, உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக