கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சற்று முன்னர் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவரை தளபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றி வரும் ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையாவை நியமிக்க இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கை மத்திய பிரதேசமான கண்டியை சொந்த இடமாகக் கொண்ட ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டி ரினிட்டி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றுள்ளார்.
இதனையடுத்து கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரியாக 1982 ஆம் ஆண்டு இணைந்து கொண்டு 1984 ஆம் ஆண்டு தனது கடற்படை அதிகாரி பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் டார்ட்மவுத் ரோயல் கடற்படைக் கலாசாலைக்கு தெரிவான அவர் கடற்படை அதிகாரிக்கான விசேட பயிற்சிகளையும் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.
இதன்போது பிரித்தானிய கடற்படையின் போர்க் கப்பல்கள் பலவற்றிலும் களநிலைப் பயிற்சிகளை முடித்துள்ளார். இதற்கமைய பிரித்தானிய போர்க் கப்பலான டெனரில் நில காலம் கடமையாற்றியும் உள்ளார்.
அதேவேளை கப்பல்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் அதிநவீன இலத்திரனியல் யுத்தம் குறித்தும் சிறப்புப் பயிற்சிகளை பிரித்தானிய கடற்படையிடம் பெற்றுக் கொண்டுள்ள ட்ரெவஸ் சின்னையா இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடற்படை நடத்திய பெரும்பாலான தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் ஓரம் கட்டப்பட்டிருந்த சின்னையாவிற்கு, இலங்கையின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதும் முக்கிய பதவி வழங்கப்பட்டது.
இதற்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டிற்கும் – கிழக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்து கிழக்கு மாகாண கடற்படைத் தளபதியாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரியர் அட்மிரல் ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டிருந்தார்.
. By a reader

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக