சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று(ஆக.,16) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தி.மு.க.,
தலைவர் கருணாநிதி, கடந்த சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக,
சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு,
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு,
'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அவர்
கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு
மருத்துவ சிகிச்சை தொடர்ந்து வந்தது.>
இந்நிலையில் இன்று அதிகாலை
மீண்டும் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான
பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் ராசாத்தி அம்மாள், கனிமொழி, தமிழரசு
மற்றும் செல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.
இது குறித்து மருத்துமனை
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் : '' தி.மு.க தலைவர் கருணாநிதி
மருத்துவமனையில் பி.இ,ஜி., டியூப் மாற்றப்படுவதற்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் '' என
குறிப்பிடப்பட்டுள்ளது. தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக