தமிழ்
சினிமாவுலகில் யதார்த்தமான கதைக் களங்களைக் கொண்டு திரைப்படம்
உருவாக்குபவர்களில் ஒருவர் இயக்குநர் வசந்தபாலன். `ஆல்பம் ', `வெயில்',
`அங்காடித் தெரு', `அரவான்', `காவியத் தலைவன்' என எண்ணிச் சொல்லும்படியான
திரைப்படங்களைத் தந்தாலும் கவனிக்கக்கூடிய இயக்குநராய் வலம் வருகிறார்.
காவியத் தலைவன் படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்து
எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தவர், அடுத்த படத்துக்கான
அறிவிப்பைத் தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு அறிவித்துள்ள திரைப்பட விருதுகளில் `காவியத் தலைவன்' திரைப்படம் ஒட்டுமொத்தமாகப் பத்து விருதுகளை அள்ளியது. 2009ஆம் ஆண்டு இயக்கிய `அங்காடித்தெரு' திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதும் வசந்தபாலனுக்குக் கிடைத்தது. இவ்விருதுகள் தந்த உற்சாகத்தில் அடுத்த படத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார் வசந்தபாலன்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில், நண்பர்களே! நான் அடுத்து துவங்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 16 வயது முதல் 20 வயது வரையுள்ள, மாநிறமான அல்லது கருப்பான, பதின் பருவ இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் தேவை. சென்னை வட்டார மொழி பேசத் தெரிந்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். உங்கள் புகைப்படங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்
முகவரி: vasanthabalannewmovie@gmail.com என்று நேற்று (ஆகஸ்ட்14) வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தனது அடுத்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் இறங்கியுள்ளார் என்பது தெரிகிறது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக