

திடுக்கிடும் தகவல்கள் இது குறித்து கேரள அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து முருகனை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கூறியதாவது, " முருகனை மெடிட்ரினா மருத்துவமனையில் அனுமதிக்க டாக்டர்கள் மறுத்தனர். ஒரு டாக்டர் முருகனை பரிசோதிக்க ஆம்புலன்சுக்கு வந்தார். அனுமதி இல்லை நோயாளி யார் என்று கேட்டார். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தேன். இதனால் அவர் வெண்டிலேட்டர் காலியில்லை என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், உதவிக்கு ஆள் இல்லை என்பதாலும் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
முயன்றிருந்தால்.. அந்த மருத்துவமனையில் போர்ட்டப்பிள் வெண்டிலேட்டர் வசதி உள்ளது. அங்குத் தலைமை டாக்டர் காலையில் பணிக்கு வருவார். அதுவரை போர்ட்டபிள் வெண்டிலேட்டர் மூலம் அவசர சிகிச்சை அளித்திருக்க முடியும்" என்று டிரைவர் கூறினார். போலீசார் நடத்திய விசாரணையில் மெடிட்ரினா மருத்துவமனையில் 7 வெண்டிலேட்டர் இருப்பது தெரிய வந்தது.
தமிழர்கள் புறக்கணிப்பு இதில் 3 நோயாளிகள் பயன்பாட்டிலும், 3 பழுதாகியும், ஒன்று காலியாகவும் இருந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் டாக்டர்கள் முருகனுக்குச் சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக