சொத்துக்களின் மொத்த மதிப்பு மட்டும் 113 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக இந்த கணக்கு எல்லாமே தேர்தல் கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. இதன் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம். ஜெயலலிதா பல கம்பெனிகளில் பங்குதாரராக இருக்கிறார். அது தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என அந்த கணக்குகள் தனி. சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபற்றி விலாவரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளுக்கு மேலேயே போகும்.
இன்ஃபோகிராஃபிக்ஸ்: ஆரிஃப் முகம்மது
ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன? கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்துக் கணக்குகளை வைத்து அலசுவோம்.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நிலவரப்படி அவரிடம் இருந்த கையிருப்பு ரொக்கம் 41 ஆயிரம். வங்கிக் கணக்குகள், நிதி நிறுவன இருப்புகளை எடுத்துக்கொண்டால் 25 வங்கி கணக்குகள் ஜெயலலிதா பெயரில் இருக்கின்றன. சென்னை, செகந்திராபாத், நீலகிரி ஆகிய இடங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன. சில வங்கிகளில் ஐந்து கணக்குகள் வரை உள்ளன. 9 கணக்குகள் சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. 25 கணக்குகளில் மொத்தமாக 10.63 கோடி ரூபாய் இருக்கிறது.
பங்குதாரராக கம்பெனிகளில் செய்யப்பட்ட முதலீடுகளை எடுத்துக்கொண்டால் ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைஸஸ், கொடநாடு எஸ்டேட், ராயல்வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட், கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 5 கம்பெனிகளில் மொத்தம் 27.44 கோடி ரூபாய் இருக்கிறது. 21,280.300 கிராம் தங்க நகையும், 3.12 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,250 கிலோ வெள்ளியும் ஜெயலலிதா வைத்திருந்தார்.

வாகனங்களை
எடுத்துக்கொண்டால் மொத்தம் 9 வாகனங்கள் அவரிடம் இருப்பதாக
சொல்லியிருக்கிறார். இதன் மொத்த மதிப்பு 42.25 லட்சம் ரூபாய். இது தேர்தல்
கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. ஆனால், TN 09 BE 5969 என்ற பதிவு எண் கொண்ட
Toyota Land Cruiser LC 200 மாடல் காரும் இதேப் போல TN 09 BE 6167 என்ற
பதிவு எண் கொண்ட இன்னொரு காரும் ஜெயலலிதா பயன்படுத்தி வந்தார். அந்த
கார்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. இந்த கார் ஒன்றின் விலை ஒரு கோடி
ரூபாய்.
அசையா சொத்துக்களில் ஆந்திரா ஜிடிமேட்லாவில் 14.44 கோடி ரூபாய் மதிப்புள்ள 14.50 ஏக்கர் விவசாய நிலமும், செய்யூரில் 34 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.43 ஏக்கர் விவசாய நிலமும், ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில், 5.03 கோடி ரூபாய் மதிப்புள்ள 651.18 ச.மீ வீடும், சென்னை மந்தைவெளியில் 43.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,206 ச.அ வணிக கட்டடமும் சென்னை பார்சன் மேனரில் 4.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 790 ச.அடி வணிக கட்டடமும் ஜெயலலிதா பெயரில் உள்ளது. இதுதவிர போயஸ் கார்டனில் இரண்டு இடங்கள் ஜெயலலிதா பெயரில் இருக்கிறது. 7.83 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 கிரவுண்ட் வீடும் 43.96 கோடி மதிப்பு கொண்ட 10 கிரவுண்ட் வீடும் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 72.09 கோடி ரூபாய்.
அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு மட்டும் 113 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக இந்த கணக்கு எல்லாமே தேர்தல் கமிஷனில் சொல்லப்பட்ட கணக்கு. இதன் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம். ஜெயலலிதா பல கம்பெனிகளில் பங்குதாரராக இருக்கிறார். அது தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா என அந்த கணக்குகள் தனி. சொத்துக் குவிப்பு வழக்கில் இதுபற்றி விலாவரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் சேர்த்தால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எங்கேயோ போகும்.
ஜெயலலிதா இறந்தபிறகு அவரின் போயஸ் கார்டன் வீடு இப்போது யார் பெயரில் இருக்கிறது என வில்லங்கம் பார்த்தோம். அது இன்று வரையில் வேறு யார் பெயருக்கும் மாறவில்லை!
- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி விகடன்,காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக