வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அதிக வருமானம் உள்ளவர்கள், அதற்கு ரிய வருமான வரியை சுயமாகக் கணக்கிட்டு, அதில் முதல் தவணையை, செப்., 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இத்தொகையை
யார் யார் செலுத்த வேண்டும் என்ற கணக்கு, வருமான வரித் துறையிடம் உள்ளது.அதன்படி வரி செலுத்துகின்றனரா என,
கண்காணித்து வருகிறோம். அதில், கிடைத்த வலுவான தகவல்கள் அடிப்படையில்,
விஜய், நயன்தாரா,சமந்தா வீடுகளில் சோதனை நடத்தி உள்ளோம், என்றார்.சமந்தா வீட்டில் எதிர்ப்பு:
சென்னை, பல்லாவரத்தில் உள்ள சமந்தாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது,
பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க, நடிகையின் உறவினர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.சமந்தாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், 'சமந்தா வெளிநாட்டில் உள்ளார். அவரிடம் கறுப்புப் பணம் இல்லை. முறையாக வருமான வரி செலுத்தி வருகிறார்' என்றார்.மூன்று ஆண்டு வரி பாக்கி: 'நடிகை நயன்தாரா, சமந்தா ஆகியோர் மூன்று ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை. வரி ஏய்ப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின், வருமான வரி கணக்குகள் முறையாக இல்லை' என வருமான வரித் துறையினர் தெரிவிக்கின்றனர்.சிக்கியது என்ன? நடிகர், நடிகைகள் வீடுகளில் நேற்று நடந்த வருமான வரி சோதனை யில் கணக்கில் வராத ரொக்கம் மற்றும்ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி புலன் விசாரணை குழுவினர் பல ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். இது பற்றி உடனடியாக தகவல் கூற முடியாது. கைப்பற்றிய ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும், என்று அவர் கூறினார்.
மதுரை சினிமா பைனான்சியர் வீட்டில் 10 மணி நேரம் ரெய்டு: மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் 'கோபுரம் பிலிம்ஸ்' பெயரில் சினிமா விநியோகம் செய்கிறார். மதுரை, ராமநாதபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர் சங்க நிர்வாகியாகவும், அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் உள்ளார்.நடிகர் விஜய் நடித்த 'புலி' சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில், அன்புச்செழியன் பங்கேற்றார். அவர் விஜய் நடித்த சினிமாவிற்கு முதலீடு செய்துள்ளாரா என்ற சந்தேகத்தின்படி, நேற்று வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் செந்தில்குமார் தலைமையில், 19 பேர் மூன்று குழுக்களாக சென்று கீரைத்துறை வீடு, தெற்கு மாசி வீதி அலுவலகம், தானப்பமுதலி தெரு கோடவுன்களில் சோதனையிட்டனர்.நேற்று காலை 7 மணிக்கு துவங்கிய சோதனை, நேற்றிரவு வரை தொடர்ந்தது. இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சோதனை நடந்த போது, அன்புச்செழியன் மதுரையில் இல்லை. அவர் சென்னை சென்றிருப்பதாக, ஊழியர்கள் தெரிவித்தனர். வருமானவரித்துறையினர், 'லாட்டரி பணம் மறைமுகமாக சினிமா எடுக்க முதலீடு செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி இச்சோதனை நடத்தப்படுகிறது,' என்றனர் தினமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக