புதன், 30 செப்டம்பர், 2015

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு பப்பாளி இலையில் இருந்து சாறு மாத்திரை...


டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான -கேரிபில்-(Caripill)  மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அந்த நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவர் ஜெயராஜ் (வணிகம்) கூறியதாவது:
இந்தியா உள்பட உலகம் முழுவதும் டெங்கு கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உருவாகி வருகிறது.உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில், 250 கோடி மக்களுக்கு டெங்குத் தாக்கும் வாய்ப்புள்ளது எனவும், ஆண்டுதோறும் 5 கோடி பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், -மைக்ரோ லேப்ஸ்- நிறுவனம் (Micro Labs Limited) விரிவான அபிவிருத்தி, ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு உதவும் -கேரிபில்-(Caripill) என்ற மாத்திரையை அறிமுகம் செய்துள்ளது.
டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு -பிளேட்லெட்- எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.
இந்த மாத்திரை, விஞ்ஞான, ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பப்பாளி இலை சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த மாத்திரை, எந்தவிதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை. டெங்கு சிகிச்சைக்கு, வழக்கமாக ரத்த பிளேட்லெட் அணுக்கள் செலுத்தும் முறையே இருந்து வருகிறது.ஆகையால், டெங்கு நோயாளிகளுக்கு பெருமளவிலான பிளேட்லெட்கள் தேவைப்படுகின்றன.
தற்போது, அறிமுகம் செய்யப்பட்ட கேரிபில் மாத்திரை பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். சந்தையில், 1100 மி.கி மாத்திரை ரூ.25 விலையில் கிடைக்கும். இந்த மாத்திரை, 18 வயது மேற்பட்டவர்கள் உட்கொள்ளலாம். குழந்தைகள் எளிதாக உட்கொள்ளும் வகையில், -கேரிபில் சிரப்- விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதற்கான அனுமதி கிடைத்ததும், சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றார் ஜெயராஜ். dinamani.com

கருத்துகள் இல்லை: