சனி, 3 அக்டோபர், 2015

இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயற்சி? கவலைக்கு இடம் ..ஷீனா போராவின்...

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா(வயது 25) எரித்துக் கொல்லப்பட்டார். ஷீனாபோராவின் சிதைந்த உடல் மறுநாள் ராய்காட் மாவட்ட காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது.இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் துப்பு துலங்கியது. அப்போது பெற்ற தாயே மகளை தனது கணவருடன் சேர்ந்து எரித்துக்கொன்றது அம்பலமானது. இதைத்தொடர்ந்து இந்திராணி முகர்ஜி, அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, முன்னாள் டிரைவர் ஷியாம்வர் பிந்துராம் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள ஆர்தூர் சாலை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை மிகவும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்திராணி முகர்ஜி உட்கொண்ட மாத்திரைகள் மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மீதான முடிவுகள் இன்னும் சரிவர தெரியவில்லை. மதியம் 2 மணி முதல் அவர் சுயநினைவின்றி உள்ளார்.

அடுத்த 24 மணி நேரம் தொடர்ந்து ஆபத்தான நிலையில்  இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்திராணி முகர்ஜி மாத்திரைகளை உட்கொண்டது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். dailythanthi.com

கருத்துகள் இல்லை: