சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, காங்கிரஸ் துணை தலைவர்
ராகுல் தடை விதித்து விட்டதால், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும்,
அவரது கோஷ்டியினரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இளங்கோவன் மீதான கோபம்
காரணமாக, தமிழக மாவட்ட காங்கிரசாரை சந்தித்து, கூட்டணி குறித்து கருத்து
கேட்கும் பணியை, மேலிட பிரதிநிதி சென்னா ரெட்டியிடம், ராகுல் ஒப்படைத்து
விட்டார்.தமிழக
காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதற்கு,
இளங்கோவன் பாலமாக இருந்தார். அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு எதிராக,
கவர்னரிடம் புகார்; மது ஒழிப்பு போராட்டம் என, தி.மு.க.,வை
திருப்திபடுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக,
'கருணாநிதி வழிகாட்டுதல் படி செயல்படும் கட்சியாக, காங்கிரசை மாற்றி
விட்டார்' என, ராகுலிடம், எதிர் கோஷ்டிகள் புகார் செய்தன.சமீபத்தில்,
சென்னையில் நடந்த மோடி - ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக, இளங்கோவன் செய்த
விமர்சனம், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த ராகுல்தம்பி காங்கிரசை ஒரு வழிப்பண்ணாம ஓயா மாட்டாரு. போயும் போயும் இத்த நம்பி ஒரு கட்சி......
அது டில்லிக்கு எட்டியதும், இளங்கோவன் மீதான விசாரணை இறுகியது. இளங்கோவனை டில்லிக்கு அழைத்து, ராகுல் நடத்திய விசாரணையில், தி.மு.க., நட்பும், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவரது தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டுக்கு, வேட்டு வைக்கும் விதமாக, கூட்டணிக்கு தடை போட்டு விட்டார் ராகுல் என்கிறது, டில்லி காங்., வட்டாரம்.
இதுகுறித்து, அந்த வட்டாரம் மேலும் கூறியதாவது:தி.மு.க.,வுடன் கூட்டணி சேரலாம் என்ற எதிர்பார்ப்பில் இளங்கோவன் இருந்தார். அந்த கூட்டணி அமைந்தால், தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும், தி.மு.க., தயவில் அவர்கள் ஜெயித்து விட்டால், பெரிய சக்தியாக உருவெடுக்கலாம் என்றும் நம்பியிருந்தார். ஆனால், அதை ராகுல் விரும்ப வில்லை. டில்லியில் நடந்த சந்திப் பில், இளங்கோவனுடன், சட்டசபை காங்., தலைவர் கோபிநாத்தும் இருந்தார். இவர், தங்கபாலு ஆதரவாளர். இளங்கோவன் மீதான குற்றச்சாட்டுகளை, அவர் அடுக்கி விட்டதாக தெரிகிறது.
அந்த நேரத்தில், இளங்கோவனை காப்பாற்ற, முகுல் வாஸ்னிக் போன்றவர்களும் அங்கே இல்லை. ராகுலின் நம்பிக்கைக்கு உரிய, சென்னா ரெட்டி மட்டுமே இருந்தார்.கூட்டணி பற்றிய விவாதம் வந்ததும், எந்த சூழ்நிலையிலும், தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பதை, ராகுல் தெளிவுபடுத்தி விட்டார்; தனியாக தேர்தலை சந்திக்கும்படியும் கூறிவிட்டார். அப்போது, செயல்படாத மாவட்ட தலைவர்கள் பற்றியும், அங்கு களையெடுப்பு நடத்தவும், ராகுல் உத்தரவிட்டார். அதுபற்றி, ஆய்வு செய்து அறிக்கை தருவதாக, இளங்கோவன் கூறினார்.
அதை ஏற்க மறுத்த ராகுல், 'நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்; அந்த வேலையை, சென்னா ரெட்டி பார்த்துக் கொள்வார்' என கூறியதும், இளங்கோவன் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சூழ்நிலையில், மண்டலவாரியாக ஆலோசனை கூட்டங்களை, இளங்கோவன் நடத்தி வருகிறார். சென்னையில் நடந்த முதல் கூட்டத்தில், முகுல் வாஸ்னிக் கலந்து கொள்ளவில்லை. ராகுல் தடை போட்டு விட்டார்.இவ்வாறு டில்லி காங்., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்.com

சென்னா ரெட்டி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக