புதன், 30 செப்டம்பர், 2015

Volkswagan மாசுக்கட்டுப்பாடு மோசடி: டீசல் எஞ்சின்களை மாற்றித்தருவதாக....அறிவிப்பு

ஜெர்மனியின் மதிப்புக்குரிய நிறுவனமாக விளங்கிய ‘வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த, மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது. இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியுள்ளது.கார் வெளியிடும் புகையில், காரியத்தின் அளவை குறைத்துக் காட்டுவதற்கென, தனி மென்பொருளை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில், வோக்ஸ்வேகன் கார்கள், வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.


இந்த டீசல் கார்கள் வெளியிடும் புகையில் ‘கார்சினோஜீனிக், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டையாக்ஸைடு’ போன்ற நச்சு வாயுக்கள் உள்ளன. இவை, சிறிய அளவில் காற்றில் கலந்தாலே உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என தற்போது தெரியவந்துள்ளது.

வோக்ஸ்வேகனின் கமர்ஷியல் கார்கள் உட்பட, ஆடி, ஸ்கோடா மற்றும் சீயட் போன்ற கார்களுக்கும் வோக்ஸ்வேகனின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கார்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தமது டீசல் கார்களில் செய்த மோசடியால், பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்சின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது. அந்த கார்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு எஞ்சின்கள் சரிசெய்து கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு மென்பொருளோ அல்லது சில பாகங்களோ மாற்றி கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன maalaimalar.com

கருத்துகள் இல்லை: