போலீஸ் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரே, விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு உயரதிகாரிகள் கொடுத்து வந்த நெருக்குதல் காரணமல்ல, அவரது தற்கொலையில் காதலும் உள்ளது என்ற கோணத்தில் கொண்டு செல்கின்றனர்.முதலில் பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவருடன் விஷ்ணுபிரியா அதிக நேரம் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரத்தை கசியவிட்ட போலீசார், இப்போது, மதுரை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞரின் உதவி வழக்குரைஞரான எம்.மாளவியா என்பவருடன் விஷ்ணுபிரியா பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளார். இவருக்குமிடையில் காதல் இருந்துள்ளது. இந்த காதல் கை கூடாமல் போனதால் தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்ற கோணத்தில் கொண்டுபோவது தெரிகிறது.;28-ம் தேதி காலை 10.50-மணிக்கு சேலம் சூரமங்கலத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மாளவியா, அவரது நண்பர்கள் கண்ணன் மற்றும் பாஸ்கர் மதுரம் ஆகியோருடன் ஆஜரானார்.>அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்ட எஸ்.பி.நாகஜோதி தலமையிலான அதிகாரிகள் குழுவினரிடம், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்த சங்கர் என்பவருக்கு ஆஜரான வழக்குரைஞர் சங்கரலிங்கம் என்பவர் மூலமாகத்தான் பள்ளிபாளையம் ஜெகநாதன் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கூலிப்படையினர் ஏழு பேர் சரணடைந்துள்ளனர்.
;இந்த இரு கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த வழக்கு தொடர்பாகத்தான் விஷ்ணுபிரியா தன்னுடன் பல மணி நேரம் பேசினார். அப்போது, தனது உயரதிகாரியான நாமக்கல் எஸ்.பி.செந்தில்குமார் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், திருச்செங்கோட்டில் உள்ள ஒயின் ஷாப்பில் சோதனை போடக்கூடாது எனவும், கீழே உள்ள போலீசாரிடம் மாமூல் வசூல் செய்யும்படியும் வற்புறுத்தினார். ஒரு வங்கி ஏ.டி.எம்.சென்டரில் கொள்ளை நடந்த போது, நீ எதுக்குமே லாயக்கில்லை என்று கூறி கீழ்த்தரமாக திட்டனார் என தன்னிடம் விஷ்ணுபிரியா கூறியதை விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தவர், “எனக்கும் விஷ்ணு பிரியாவுக்கும் வழக்குரைஞர் என்ற வகையில் மட்டுமே பேசிக்கொண்டோம், வேறு எந்தவகையான கண்ணோட்டமும் இல்லை” என்றார் மாளவியா.
;மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, மீண்டும் மாளவியாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோகுல்ராஜ் கொலை நடந்த நாளிலிருந்தே இவர்களின் செல்போன் உரையாடல் இருக்கிறது. தன்னுடைய உயர் அதிகாரிகளின் டார்ச்சரை எல்லாம் சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ளத்தக்க அளவில் இருவருக்கும் இந்த வழக்கின் மூலம் மட்டும் தொடர்பு வர வாய்ப்பில்லை. இவர்களும் வழக்கை திசை திருப்புகிறார்கள் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறுகின்றனர்
விஷ்ணு பிரியாவும், மாளவியாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். தவிர 2003-டி.எஸ்.பி பேட்ச்சில் தேர்வான 33-பேரில் ஒருவரை தவிர மற்ற எல்லோருமே எஸ்.டி, எஸ்.சி, வகுப்பை சேர்ந்தவர்கள் என்ற கூடுதல் தகவலையும் சொன்னார்கள்.>பெ.சிவசுப்ரமணியம் nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக