நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்?
தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம்!
நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்!
என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது . ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை....
கூட்டத்தில் தெறித்த பொறிகள்!
தமிழுக்காக வழக்கறிஞர்கள் போராடியதும், 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்கள் போராடியதும்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கூறுகிறது.
உண்மையில் 14-ம் தேதி நடந்த தமிழ் போராட்டத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அன்று அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, சஸ்பெண்டு செய்யப்பட்ட 14 பேரில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையில் இருந்தார்கள். இன்னும் 3 பேர் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சம்பவம் குறித்து போலீசு புகாரோ, வழக்கோ இல்லை.
இருந்த போதிலும் இந்த நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்கு விடை, செப்டம்பர் 10-ம் தேதி மதுரையில் நடத்தப்பட்ட நீதிமன்ற ஊழல் எதிர்ப்பு பேரணிதான். சுமார் 1500 வழக்கறிஞர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்தப் பேரணி பெயர் குறிப்பிட்டு பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது. அந்த குற்றத்துக்காகத்தான் இந்த சஸ்பெண்டு நடவடிக்கை. இதனை வெளியில் சொன்னால் சந்தி சிரித்துப் போகும் என்பதனால்தான், நீதிமன்றத்துக்குள் கலகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டை போலீசுடன் சேர்ந்து நீதித்துறை ஜோடித்துள்ளது.
நீதிபதிகளின் ஊழல் குறித்து தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தால் அதனை வாங்கிக் கிடப்பில் போட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் ஊழல் தீர்ப்புகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்கு காரணம். கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் கொள்ளையிடப் படுவதற்கு நீதிமன்றம் எப்படி உடந்தையாகவும் கூட்டாளியாகவும் இருந்திருக்கிறது என்பதை மக்களுக்குச் சொன்னோம். இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, மக்களின் சொத்துக்களும், வாழ்வாதாரமும் கொள்ளை போவது பற்றிய பிரச்சினை என்று புரிய வைத்தோம். இதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்குக் காரணம்.
நீதிபதிகள் சொல்வது போல யாரோ பத்து இருபது வக்கீல்கள் நீதித்துறை ஊழல் பற்றிப் பேசவில்லை. தென் மாவட்டங்கள் அனைத்திலுமிருந்து திரண்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சங்க நிர்வாகிகளும் இந்த குற்றச்சாட்டை வழி மொழிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பலர் இதுவரை சொல்லத் தயங்கிய உண்மை.
நீதிபதிகளுககு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று யாராலும் மறுக்க முடியவில்லை. அதனால்தான் குற்றம் சாட்டுபவர்களை அவதூறு செய்கிறார்கள். “ஒழுங்காக சட்டம் படிக்காதவர்கள், தொழில் செய்யத் தெரியாதவர்கள், கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகள்” என்று போராடும் வழக்கறிஞர்களைப் பலவாறாகத் தூற்றுகிறார்கள்.
இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் 14 பேரில் ஒருவருக்குக் கூட இவர்கள் கூறும் குற்றச்சாட்டு எதுவும் பொருந்தாது. மாறாக அத்தகைய குற்றப் பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள்தான் போலீசுக்கும் நீதிபதிகளுக்கும் ஊழலின் தரகர்களாக இருக்கிறார்கள். மேல் மட்டத்தில் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தரகர்களாக இருக்கிறார்கள். இத்தகையவர்கள் மீதெல்லாம் தொழில் தருமத்தை மீறியதாக பார் கவுன்சில் எக்காலத்திலும் நடவடிக்கை எடுத்ததில்லை.
பார் கவுன்சில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதும் இவர்கள் வழக்கறிஞர்களின் வாக்குகளை எப்படி வாங்கினார்கள் என்பதும் நாம் அறியாத ரகசியமல்ல. நேர்மையற்ற முறையில் பதவியைக் கைப்பற்றி, அந்தப் பதவியைத் தமது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் பிரபாகரன், செல்வம் போன்ற நபர்கள்தான் தொழில் தருமத்தை பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.
“நீதித்துறை ஊழலுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்பது மட்டுமல்ல, எந்த சமூக அநீதிக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் போராடக்கூடாது” என்பது இவர்கள் கருத்து. மக்கள் நலனுக்கான பொதுப்பிரச்சினை எதற்காகவும் வழக்கறிஞர்கள் போராடக் கூடாது என்று உபதேசிக்கும் இவர்கள்தான், நீதிமன்றப் புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு, சிவில் சட்ட திருத்தம், மாலிமத் கமிட்டி ரிப்போர்ட், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். இவையனைத்தும் மக்களின் பிரச்சினைகளேயன்றி, வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினைகள் அல்ல.
இன்று 14 வழக்கறிஞர்கள் சஸ்பெண்டு செய்யப் பட்டிருப்பதற்கு காரணமான நீதித்துறை ஊழல் பிரச்சினையும் கூட வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினை அல்ல. நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள். கொள்ளை போவதோ பொதுச்சொத்து!
வழக்கறிஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நீதித்துறையும், பார் கவுன்சிலும் எடுத்துள்ள நடவடிக்கைகள், இன்று நமது தன்மானப் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. இனிமேல் வழக்கறிஞர்கள் கையை நீட்டிப் பேசினால், குரலை உயர்த்தினால் காசு வாங்கும் முன்சீப் கூட நம்மைத் தண்டிப்பதாக மிரட்டக்கூடும். இதற்கெல்லாம் உயர்நீதிமன்றம் துணை நிற்கும். நாம் சுதந்திரமாகத் தொழில் செய்யும் உரிமையும் பறிபோகும். வழக்கறிஞர்கள் இனி அடிமைகள் என்ற நிலை உருவாகி நீதித்துறையே ஊழல் நீதிபதிகள்-புரோக்கர்கள் வசம் போகும்.
இதைத் தடுக்க வேண்டுமானால் நேர்மையாகத் தொழில் செய்யும் வழக்கறிஞர்களாகிய நாம் களத்தில் இறங்க வேண்டும். நீதித்துறை நம்மை மிரட்டுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுடைய பயந்த நிலையைத்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
தலைமை நீதிபதி கவுல் தமிழ்நாட்டிற்கு வரும்போது, “ஆறு மாதத்தில் நீதித்துறையைச் சுத்தம் செய்வேன்” எனச் சொல்லி வந்தாராம். ஆனால், ஊழல் நீதிபதிகளின் காவலனாக அவர் களத்தில் நிற்பதோடு, ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களை மிரட்டவும் கிளம்பியுள்ளார். 5000 வழக்கறிஞர்கள் உள்ள மதுரையை மிரட்டி ஒடுக்கி விட்டால், மற்ற வழக்கறிஞர்கள் அடங்கி விடுவார்கள் என்பதுதான் கவுல் மற்றும் அவரது கூட்டாளிகளின் கருத்து.
ஒட்டு மொத்த தமிழகத்தின் போராட்டக் குரலைப் பிரதிபலிக்கும் மதுரையை நாம் இழக்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 வழக்கறிஞர்களின் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களின் பிரச்சனையாகும். இதற்கு முன்பு நமது போராட்டம் சுபாஷன் ரெட்டியை விரட்டியுள்ளது. தமிழக வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்தால் தலைமை நீதிபதி கவுலின் சூழ்ச்சியையும் வெல்ல முடியும்.
ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை நமது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. பல நேர்மையான நீதிபதிகள் விஷ்ணுப்பிரியாவைப் போலத் தவித்து வருகிறார்கள்.
நீதித்துறை ஊழல் குறித்த உண்மைகளை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதுதான் நீதிபதிகள் நடுங்குவதன் அடிப்படை. இந்த நடவடிக்கைகள் மூலம் நம்மை மிரட்டிப் பணிய வைத்து விட முடியும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடியாது என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்!
சென்னை உயர்நீதிமன்றம்.
தொடர்புக்கு: 98428 12062
திருச்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. நீதிமன்ற கட்டிடங்கள் (வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட) அரசுக்கு சொந்தமானவை. வழக்கறிஞர்களின்றி நீதிபரிபாலனம் செய்ய முடியாது, கூடாது. இரு தரப்பு வழக்கறிஞர்களே, நீதியினை, நீதிபதிகளுக்கு எடுத்தியம்புகின்றனர். அரசுக்கு சொந்தமான நீதிமன்ற கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில், நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. வழக்கறிஞர்கள் சிலர் குற்றம் சாட்டப்படுவதால், வழக்கறிஞர்கள் சங்கமே நீதித்துறையால் வெளியேற்றப்பட்டு மூடப்படுகிறது, மிரட்டப்படுவது, வேடிக்கையானது, விந்தையானது. நீதித்துறையில் சிலர் ஊழல் புரிந்தால் நாளை அரசே, நீதிமன்றங்களை மூட உத்தரவிடலாமா?
எனவே மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் மூடப்பட்டு, வழக்கறிஞர்கள் (நூலகம்) வெளியேற்றப்பட்டது ஒரு கெட்ட முன்மாதிரியாகும். ஜனநாயக குரல்வளையை நெறிப்பதாகும். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தன் உத்தரவினை திரும்பப் பெற இந்த கூட்டம் ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது. சுதந்திரமாக வழக்கறிஞர்களுக்கான சங்க இடத்தில் இயங்கிட வழக்கறிஞர்களுக்கு முழுமையான உரிமையுண்டு. உயர்நீதிமன்றம் எவ்விதத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ செய்வதை தவிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. வழக்கறிஞர்கள் தொழிலில், கிரிமினல்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டிற்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பேற்க வேண்டும். வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 24-ஐ பின்பற்றவில்லை. முன்பு கர்நாடக மாநிலத்தில் போலி சட்டக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தற்போது ஆந்திர மாநிலத்தில் போலி சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞர்கள் தொழிலில் ஊடுருவியுள்ளனர். கல்லூரி சென்று பட்டம் பயிலாமல், தொலைதூரக் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக, தமிழ்நாடு பார் கவுன்சிலால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த போலி வக்கீல்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலின் சில உறுப்பினர்களின் நிரந்தர வாக்காளர்களாக உள்ளனர். இதனைக் குறித்து C.B.I விசாரணைக்கோரி, இந்தக் கூட்டமைப்பு ஒருமனதாக மத்திய அரசினை வேண்டுகிறது.
3. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க, உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. 15 வழக்குரைஞர்களின் வழக்கறிஞர்கள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது அகில இந்திய பார் கவுன்சில் தனது அதிகார வரம்பினை (வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 36) மீறும் செயலாகும். அகில இந்திய பார் கவுன்சில் ஒரு மேல்முறையீட்டு அமைப்பு, தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து செயல்பட முடியவில்லையெனில், தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கி, இடைக்கால குழுவினை நியமிக்க வேண்டும். 15 வழக்குரைஞர்களின் மீதான உத்தரவினை அகில இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும்.
5. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் குழு (Collegium) மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
பலர் திறமையற்றவர்கள், ஊழல் செய்கிறார்கள்
இவைகள் உண்மையல்ல எனில், ஏன் மத்திய தேசிய நீதிபதிகள் நியமன குழு சட்டம் 2014 (The National Judicial Appointments Commission Act, 2014)–ஐ இயற்றியது.
அக்கால உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிலாகவும், கடவுளர் (Lords) ஆகவும் இருந்தனர். அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217 (1)(b)-ன் படி பாராளுமன்றம் மட்டுமே அவர்களை நீக்க முடியும். ஆனால் தற்போதைய நீதிபதிகள் இவ்வாறு கடவுளர்களாக பணியாற்றுகிறார்களா? நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதா? நிச்சயமாக இல்லை.
எனவே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217(1)(b), Judges Protection Act 1850 & Judicial Officers Protection Act 1985 ஆகியவற்றை ரத்து செய்ய, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், வேண்டுகோள் விடுக்க வேண்டும் என இந்த தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது. வேண்டுமென்றே தவறான தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மீது இழப்பீடு கோர மேலை நாடுகள் போன்று சட்டம் இயற்றி வழிவகை செய்ய வேண்டும்.
6. இந்திய உச்சநீதிமன்றம் 2006-ல் The Police Act 1861 ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்காக இயற்றப்பட்டதை, சுதந்திர இந்தியாவில் இன்றும் அமுலில் இருப்பதை கண்டித்து ஒவ்வொரு மாநிலமும் புதிதாக போலீஸ் சட்டம் இயற்றிட உத்திரவிட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் மாதிரி (வரைவு) சட்டத்தினையும் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அதன்படி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அமல்படுத்தவில்லை.
தமிழ்நாடு போலீஸ் சட்டம், வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் மோதலை முடிவுக்கு கொண்டுவர, மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மாநகர ஆணையர்) கொண்ட குழு அமைக்க வழிவகை செய்கிறது. ஆனால் தமிழ்நாடு சட்டத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதிலாக மாவட்ட ஆட்சியரை சேர்ந்திருப்பது தவறானது. உரிய மாற்றம் செய்ய வேண்டும். இன்றைய வழக்கறிஞர்கள் போராட்டங்கள் பெரும்பாலானவற்றிற்கு முடிவு காண இயலும். எனவே இந்த தமிழ்நாடு போலீஸ் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு சுதந்திரமும், பொறுப்பும் (Accountability) ஏற்படுத்தும்.
7. முரண்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புகள், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவம் கீழமை நீதிபதிகளுக்கு ஏற்படக்கூடாது. இந்த முரண்பட்ட தீர்ப்புகள் ஊழலுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எனவே வழக்கறிஞர்களுக்கு போதிக்கும் உயர்நீதிமன்றம், முரண்பட்ட தீர்ப்புகள் (Journals) வெளியாகாமல் ஒரு குழுவினை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தீர்ப்புரைகள் பதிப்பிற்கு வெளியிட வேண்டும்.
8. நீதிமன்றத்தின் மாண்பினையும், (Majesty) வழக்கறிஞர்களின் கண்ணியத்தையும் (Nobility) காப்பாற்ற தமிழ்நாடு வழக்கறிஞர்களின் சங்கமும், வழக்கறிஞர்களும் திருச்சிராப்பள்ளி மாநாட்டில் உறுதி பூணுகிறது.
9. குடும்ப உறுப்பினர்கள் சொத்து விபரங்களை வெளியிடாத நீதிபதிகள், உடனே தங்கள் குடும்ப சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்.
10. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடியாக வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். உண்மை நிலை அறிய, சக நீதிபதிகளின் ஆலோசனைகளை பெறக்கூடாது.
இத்தீர்மானங்கள் செயல்படுவதை கண்காணித்து இது சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க மாநில அளவில் கமிட்டி (குழு) அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
மாநிலக்குழுவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகர சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளர் உறுப்பினர்களாக இருப்பார்கள். திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருவார் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு
கூட்டத்தில் தெறித்த பொறிகள்!
- சென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து திருச்சியில் புதிய போராட்டக்குழு உதயம்!
- 14 வழக்கறிஞர்களின் தற்காலிக நீக்கம், மதுரை வழக்கறிஞர் சங்கத்தைக் காலி செய்யும் உத்தரவு, பல்வேறு சங்கங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து – சென்னை, மதுரை உயர்நீதிமன்றம் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் இணைந்து நாளை 28-09-2015 அன்று நீதிமன்ற புறக்கணிப்பு.
- தமிழக நீதிமன்ற வளாகங்களில் துண்டறிக்கை, சுவரொட்டி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எல்லா கருத்துரிமைகளையும் பறிக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நாளை தமிழக நீதிமன்ற வளாகங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்.
- தமிழக பார் கவுன்சிலின் உரிமையை மீறும் வகையில், அகில இந்திய பார் கவுன்சில் 14 வழக்குரைஞர்களை சஸ்பெண்டு செய்து, அவர்கள் மீதான விசாரணையை கர்நாடகாவில் நடத்துவதாக அறிவித்திருக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு கண்டனம்.
- அகில இந்திய பார் கவுன்சிலின் இந்த முடிவை தமிழக பார் கவுன்சில் வன்மையாக கண்டித்து நிராகரிக்காமல், மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்ததற்கும் கண்டனம்.
- சென்னை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய பாதுகப்பு படை வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சிலின் துணைத்தலைவர் பிரபாகரன் அனுப்பியுள்ள புகார் மனு வழக்கறிஞர்களுக்கு இழைத்திருக்கும் துரோகம் என்றும், அவரை அந்தப் பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் அறிவிப்பு.
- தமிழக பார் கவுன்சில் தலைவரான செல்வம் நீதிபதிகளை விமரிசித்தோ, போலீசை விமரிசித்தோ வழக்கறிஞர்கள் பேசினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று பேசியிருப்பதற்கு கண்டனம். வழக்கறிஞர்களுக்கு எதிராகச் செயல்படும் செல்வத்தை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்.
- நீதித்துறை ஊழல் என்பது மறுக்கமுடியாத எதார்த்தமாகிவிட்ட சூழலில், நீதிபதிகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், கண்காணிப்புக்கு உட்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்பதால், நீதிமன்ற அறையில் மட்டுமல்ல, நீதிபதிகளுடைய அறைகளிலும், அவர்களுடைய வீட்டுக்கு வெளியிலும் கண்காணிப்பு காமெரா பொருத்தப்பட வேண்டும். உயர்நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.
- ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் விசாரணை நடத்தப்படுவதில்லை. ஆனால் நீதிமன்ற ஊழலை அம்பலப்படுத்தியதன் காரணமாக, வேண்டுமென்றே வழக்கறிஞர்களின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படுவதற்கு கண்டனம்.
- நீதித்துறை ஊழல், உயர்நீதி மன்றத்தில் தமிழ், வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சினைக்காகப் போராடுதல் போன்றவற்றை கடுமையாக வெறுக்கின்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட சில பார்ப்பன நீதிபதிகளும் பார்ப்பன வழக்குரைஞர்களும், பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்களுக்கு எதிராக துவேசத்தைப் பரப்புவதற்கு கண்டனம்.
- மதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை
- 6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு
- மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உரிமத்தையே ரத்து செய்வதாக மிரட்டல்
- சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மத்திய போலீசு படையை கொண்டு வரும் திட்டம்
- தலைமை நீதிபதி தத்து தமிழக வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தூண்டுவது
- அனைத்திந்திய பார் கவுன்சில் நேரடியாக மதுரை வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பது
தமிழுக்காக வழக்கறிஞர்கள் போராடியதும், 16-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது வழக்குரைஞர்கள் போராடியதும்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்று அனைத்திந்திய பார் கவுன்சில் கூறுகிறது.
உண்மையில் 14-ம் தேதி நடந்த தமிழ் போராட்டத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அன்று அவர்கள் அனைவரும் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சென்னை வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது, சஸ்பெண்டு செய்யப்பட்ட 14 பேரில் 3 பேர் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையில் இருந்தார்கள். இன்னும் 3 பேர் மதுரையில் இருந்தார்கள். 16-ம் தேதி சம்பவம் குறித்து போலீசு புகாரோ, வழக்கோ இல்லை.
இருந்த போதிலும் இந்த நடவடிக்கை ஏன் என்ற கேள்விக்கு விடை, செப்டம்பர் 10-ம் தேதி மதுரையில் நடத்தப்பட்ட நீதிமன்ற ஊழல் எதிர்ப்பு பேரணிதான். சுமார் 1500 வழக்கறிஞர்களுக்கு மேல் கலந்து கொண்ட அந்தப் பேரணி பெயர் குறிப்பிட்டு பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது. அந்த குற்றத்துக்காகத்தான் இந்த சஸ்பெண்டு நடவடிக்கை. இதனை வெளியில் சொன்னால் சந்தி சிரித்துப் போகும் என்பதனால்தான், நீதிமன்றத்துக்குள் கலகம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டை போலீசுடன் சேர்ந்து நீதித்துறை ஜோடித்துள்ளது.
நீதிபதிகளின் ஊழல் குறித்து தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியிருந்தால் அதனை வாங்கிக் கிடப்பில் போட்டிருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் ஊழல் தீர்ப்புகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்கு காரணம். கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட பொதுச்சொத்துகள் கொள்ளையிடப் படுவதற்கு நீதிமன்றம் எப்படி உடந்தையாகவும் கூட்டாளியாகவும் இருந்திருக்கிறது என்பதை மக்களுக்குச் சொன்னோம். இது நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல, மக்களின் சொத்துக்களும், வாழ்வாதாரமும் கொள்ளை போவது பற்றிய பிரச்சினை என்று புரிய வைத்தோம். இதுதான் நீதிபதிகளின் ஆத்திரத்துக்குக் காரணம்.
நீதிபதிகள் சொல்வது போல யாரோ பத்து இருபது வக்கீல்கள் நீதித்துறை ஊழல் பற்றிப் பேசவில்லை. தென் மாவட்டங்கள் அனைத்திலுமிருந்து திரண்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும் சங்க நிர்வாகிகளும் இந்த குற்றச்சாட்டை வழி மொழிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பலர் இதுவரை சொல்லத் தயங்கிய உண்மை.
நீதிபதிகளுககு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று யாராலும் மறுக்க முடியவில்லை. அதனால்தான் குற்றம் சாட்டுபவர்களை அவதூறு செய்கிறார்கள். “ஒழுங்காக சட்டம் படிக்காதவர்கள், தொழில் செய்யத் தெரியாதவர்கள், கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகள்” என்று போராடும் வழக்கறிஞர்களைப் பலவாறாகத் தூற்றுகிறார்கள்.
இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் 14 பேரில் ஒருவருக்குக் கூட இவர்கள் கூறும் குற்றச்சாட்டு எதுவும் பொருந்தாது. மாறாக அத்தகைய குற்றப் பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள்தான் போலீசுக்கும் நீதிபதிகளுக்கும் ஊழலின் தரகர்களாக இருக்கிறார்கள். மேல் மட்டத்தில் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தரகர்களாக இருக்கிறார்கள். இத்தகையவர்கள் மீதெல்லாம் தொழில் தருமத்தை மீறியதாக பார் கவுன்சில் எக்காலத்திலும் நடவடிக்கை எடுத்ததில்லை.
பார் கவுன்சில் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதும் இவர்கள் வழக்கறிஞர்களின் வாக்குகளை எப்படி வாங்கினார்கள் என்பதும் நாம் அறியாத ரகசியமல்ல. நேர்மையற்ற முறையில் பதவியைக் கைப்பற்றி, அந்தப் பதவியைத் தமது சொந்த ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் பிரபாகரன், செல்வம் போன்ற நபர்கள்தான் தொழில் தருமத்தை பற்றி நமக்கு உபதேசம் செய்கிறார்கள்.
“நீதித்துறை ஊழலுடன் அனுசரித்துப் போக வேண்டும் என்பது மட்டுமல்ல, எந்த சமூக அநீதிக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் போராடக்கூடாது” என்பது இவர்கள் கருத்து. மக்கள் நலனுக்கான பொதுப்பிரச்சினை எதற்காகவும் வழக்கறிஞர்கள் போராடக் கூடாது என்று உபதேசிக்கும் இவர்கள்தான், நீதிமன்றப் புறக்கணிப்பு காரணமாக மக்கள் பாதிக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு, சிவில் சட்ட திருத்தம், மாலிமத் கமிட்டி ரிப்போர்ட், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் என்று பல பிரச்சினைகளுக்காக தமிழக வழக்கறிஞர்கள் போராடியிருக்கிறார்கள். இவையனைத்தும் மக்களின் பிரச்சினைகளேயன்றி, வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினைகள் அல்ல.
இன்று 14 வழக்கறிஞர்கள் சஸ்பெண்டு செய்யப் பட்டிருப்பதற்கு காரணமான நீதித்துறை ஊழல் பிரச்சினையும் கூட வழக்கறிஞர்களின் துறை சார்ந்த பிரச்சினை அல்ல. நீதித்துறை ஊழலால் பாதிக்கப்படுபவர்கள் மக்கள். கொள்ளை போவதோ பொதுச்சொத்து!
வழக்கறிஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நீதித்துறையும், பார் கவுன்சிலும் எடுத்துள்ள நடவடிக்கைகள், இன்று நமது தன்மானப் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. இனிமேல் வழக்கறிஞர்கள் கையை நீட்டிப் பேசினால், குரலை உயர்த்தினால் காசு வாங்கும் முன்சீப் கூட நம்மைத் தண்டிப்பதாக மிரட்டக்கூடும். இதற்கெல்லாம் உயர்நீதிமன்றம் துணை நிற்கும். நாம் சுதந்திரமாகத் தொழில் செய்யும் உரிமையும் பறிபோகும். வழக்கறிஞர்கள் இனி அடிமைகள் என்ற நிலை உருவாகி நீதித்துறையே ஊழல் நீதிபதிகள்-புரோக்கர்கள் வசம் போகும்.
இதைத் தடுக்க வேண்டுமானால் நேர்மையாகத் தொழில் செய்யும் வழக்கறிஞர்களாகிய நாம் களத்தில் இறங்க வேண்டும். நீதித்துறை நம்மை மிரட்டுவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுடைய பயந்த நிலையைத்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
தலைமை நீதிபதி கவுல் தமிழ்நாட்டிற்கு வரும்போது, “ஆறு மாதத்தில் நீதித்துறையைச் சுத்தம் செய்வேன்” எனச் சொல்லி வந்தாராம். ஆனால், ஊழல் நீதிபதிகளின் காவலனாக அவர் களத்தில் நிற்பதோடு, ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களை மிரட்டவும் கிளம்பியுள்ளார். 5000 வழக்கறிஞர்கள் உள்ள மதுரையை மிரட்டி ஒடுக்கி விட்டால், மற்ற வழக்கறிஞர்கள் அடங்கி விடுவார்கள் என்பதுதான் கவுல் மற்றும் அவரது கூட்டாளிகளின் கருத்து.
ஒட்டு மொத்த தமிழகத்தின் போராட்டக் குரலைப் பிரதிபலிக்கும் மதுரையை நாம் இழக்க முடியாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 வழக்கறிஞர்களின் பிரச்சனை ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களின் பிரச்சனையாகும். இதற்கு முன்பு நமது போராட்டம் சுபாஷன் ரெட்டியை விரட்டியுள்ளது. தமிழக வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்தால் தலைமை நீதிபதி கவுலின் சூழ்ச்சியையும் வெல்ல முடியும்.
ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை நமது ஊழல் எதிர்ப்புப் போராட்டம் ஆட்டம் காண வைத்திருக்கிறது. பல நேர்மையான நீதிபதிகள் விஷ்ணுப்பிரியாவைப் போலத் தவித்து வருகிறார்கள்.
நீதித்துறை ஊழல் குறித்த உண்மைகளை நாம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்பதுதான் நீதிபதிகள் நடுங்குவதன் அடிப்படை. இந்த நடவடிக்கைகள் மூலம் நம்மை மிரட்டிப் பணிய வைத்து விட முடியும் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முடியாது என்பதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்!
- மதுரை வழக்கறிஞர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டவும் நீதித்துறை ஊழலை ஒழிக்கவும் தமிழகம் தழுவிய போராட்டக்குழு ஒன்றை உருவாக்குவோம்!
- நீதித்துறை ஊழலுக்கு எதிராகப் போராடி வருகின்ற பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோருடன் ஒன்றிணைப்பை உருவாக்குவோம்!
- தமிழக உயர்நீதிமன்றத்தை மத்திய போலீசிடம் ஒப்படைக்கும் சதியை முறியடிப்போம்!
- “நீதித்துறை ஊழல் என்பது வழக்கறிஞர் பிரச்சினையல்ல, அது மக்கள் பிரச்சினை” என்ற உண்மையை கன்னியாகுமரி முதல் சென்னை வரை கொண்டு செல்வோம்!
- ஊழல் நீதிபதிகளைத் தண்டிக்க புதிய வழிமுறை காண்போம்! “அவமதிப்பு அதிகாரம்” என்ற கொடுங்கோன்மையை அகற்றப் போராடுவோம்!
- மதுரை வழக்கறிஞர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பார் கவுன்சில் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும் சென்னை செல்வோம்!
சென்னை உயர்நீதிமன்றம்.
தொடர்புக்கு: 98428 12062
திருச்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. நீதிமன்ற கட்டிடங்கள் (வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட) அரசுக்கு சொந்தமானவை. வழக்கறிஞர்களின்றி நீதிபரிபாலனம் செய்ய முடியாது, கூடாது. இரு தரப்பு வழக்கறிஞர்களே, நீதியினை, நீதிபதிகளுக்கு எடுத்தியம்புகின்றனர். அரசுக்கு சொந்தமான நீதிமன்ற கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் கண்காணிப்பில், நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. வழக்கறிஞர்கள் சிலர் குற்றம் சாட்டப்படுவதால், வழக்கறிஞர்கள் சங்கமே நீதித்துறையால் வெளியேற்றப்பட்டு மூடப்படுகிறது, மிரட்டப்படுவது, வேடிக்கையானது, விந்தையானது. நீதித்துறையில் சிலர் ஊழல் புரிந்தால் நாளை அரசே, நீதிமன்றங்களை மூட உத்தரவிடலாமா?
எனவே மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் மூடப்பட்டு, வழக்கறிஞர்கள் (நூலகம்) வெளியேற்றப்பட்டது ஒரு கெட்ட முன்மாதிரியாகும். ஜனநாயக குரல்வளையை நெறிப்பதாகும். எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தன் உத்தரவினை திரும்பப் பெற இந்த கூட்டம் ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது. சுதந்திரமாக வழக்கறிஞர்களுக்கான சங்க இடத்தில் இயங்கிட வழக்கறிஞர்களுக்கு முழுமையான உரிமையுண்டு. உயர்நீதிமன்றம் எவ்விதத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ செய்வதை தவிர்த்து வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு இடமளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2. வழக்கறிஞர்கள் தொழிலில், கிரிமினல்கள் ஊடுருவியுள்ளனர் என்ற குற்றச்சாட்டிற்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பேற்க வேண்டும். வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 24-ஐ பின்பற்றவில்லை. முன்பு கர்நாடக மாநிலத்தில் போலி சட்டக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தற்போது ஆந்திர மாநிலத்தில் போலி சட்டப் பட்டம் பெற்று வழக்கறிஞர்கள் தொழிலில் ஊடுருவியுள்ளனர். கல்லூரி சென்று பட்டம் பயிலாமல், தொலைதூரக் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர்கள் வழக்கறிஞர்களாக, தமிழ்நாடு பார் கவுன்சிலால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த போலி வக்கீல்கள், தமிழ்நாடு பார் கவுன்சிலின் சில உறுப்பினர்களின் நிரந்தர வாக்காளர்களாக உள்ளனர். இதனைக் குறித்து C.B.I விசாரணைக்கோரி, இந்தக் கூட்டமைப்பு ஒருமனதாக மத்திய அரசினை வேண்டுகிறது.
3. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ்மொழியை அறிவிக்க, உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. 15 வழக்குரைஞர்களின் வழக்கறிஞர்கள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டது அகில இந்திய பார் கவுன்சில் தனது அதிகார வரம்பினை (வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 36) மீறும் செயலாகும். அகில இந்திய பார் கவுன்சில் ஒரு மேல்முறையீட்டு அமைப்பு, தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து செயல்பட முடியவில்லையெனில், தமிழ்நாடு பார் கவுன்சில் பொறுப்பாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கி, இடைக்கால குழுவினை நியமிக்க வேண்டும். 15 வழக்குரைஞர்களின் மீதான உத்தரவினை அகில இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும்.
5. உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் குழு (Collegium) மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
பலர் திறமையற்றவர்கள், ஊழல் செய்கிறார்கள்
இவைகள் உண்மையல்ல எனில், ஏன் மத்திய தேசிய நீதிபதிகள் நியமன குழு சட்டம் 2014 (The National Judicial Appointments Commission Act, 2014)–ஐ இயற்றியது.
அக்கால உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கோவிலாகவும், கடவுளர் (Lords) ஆகவும் இருந்தனர். அதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217 (1)(b)-ன் படி பாராளுமன்றம் மட்டுமே அவர்களை நீக்க முடியும். ஆனால் தற்போதைய நீதிபதிகள் இவ்வாறு கடவுளர்களாக பணியாற்றுகிறார்களா? நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதா? நிச்சயமாக இல்லை.
எனவே அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 217(1)(b), Judges Protection Act 1850 & Judicial Officers Protection Act 1985 ஆகியவற்றை ரத்து செய்ய, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், வேண்டுகோள் விடுக்க வேண்டும் என இந்த தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் மாநாடு ஒருமனதாக தீர்மானிக்கிறது. வேண்டுமென்றே தவறான தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மீது இழப்பீடு கோர மேலை நாடுகள் போன்று சட்டம் இயற்றி வழிவகை செய்ய வேண்டும்.
6. இந்திய உச்சநீதிமன்றம் 2006-ல் The Police Act 1861 ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்காக இயற்றப்பட்டதை, சுதந்திர இந்தியாவில் இன்றும் அமுலில் இருப்பதை கண்டித்து ஒவ்வொரு மாநிலமும் புதிதாக போலீஸ் சட்டம் இயற்றிட உத்திரவிட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் மாதிரி (வரைவு) சட்டத்தினையும் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு அதன்படி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் அமல்படுத்தவில்லை.
தமிழ்நாடு போலீஸ் சட்டம், வழக்கறிஞர்கள் – காவல்துறையினர் மோதலை முடிவுக்கு கொண்டுவர, மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (மாநகர ஆணையர்) கொண்ட குழு அமைக்க வழிவகை செய்கிறது. ஆனால் தமிழ்நாடு சட்டத்தில் மாவட்ட நீதிபதிக்கு பதிலாக மாவட்ட ஆட்சியரை சேர்ந்திருப்பது தவறானது. உரிய மாற்றம் செய்ய வேண்டும். இன்றைய வழக்கறிஞர்கள் போராட்டங்கள் பெரும்பாலானவற்றிற்கு முடிவு காண இயலும். எனவே இந்த தமிழ்நாடு போலீஸ் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு சுதந்திரமும், பொறுப்பும் (Accountability) ஏற்படுத்தும்.
7. முரண்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புகள், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவம் கீழமை நீதிபதிகளுக்கு ஏற்படக்கூடாது. இந்த முரண்பட்ட தீர்ப்புகள் ஊழலுக்கு உறுதுணையாக இருக்கின்றன. எனவே வழக்கறிஞர்களுக்கு போதிக்கும் உயர்நீதிமன்றம், முரண்பட்ட தீர்ப்புகள் (Journals) வெளியாகாமல் ஒரு குழுவினை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தீர்ப்புரைகள் பதிப்பிற்கு வெளியிட வேண்டும்.
8. நீதிமன்றத்தின் மாண்பினையும், (Majesty) வழக்கறிஞர்களின் கண்ணியத்தையும் (Nobility) காப்பாற்ற தமிழ்நாடு வழக்கறிஞர்களின் சங்கமும், வழக்கறிஞர்களும் திருச்சிராப்பள்ளி மாநாட்டில் உறுதி பூணுகிறது.
9. குடும்ப உறுப்பினர்கள் சொத்து விபரங்களை வெளியிடாத நீதிபதிகள், உடனே தங்கள் குடும்ப சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்.
10. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடியாக வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும். உண்மை நிலை அறிய, சக நீதிபதிகளின் ஆலோசனைகளை பெறக்கூடாது.
இத்தீர்மானங்கள் செயல்படுவதை கண்காணித்து இது சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க மாநில அளவில் கமிட்டி (குழு) அமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
மாநிலக்குழுவில் ஒவ்வொரு மாவட்ட தலைநகர சங்கத்தின் தலைவர் அல்லது செயலாளர் உறுப்பினர்களாக இருப்பார்கள். திருச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருவார் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக