ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய
பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்குள்ள சான் ஜோஸ் நகரில் தகவல்
தொழில்நுட்பத்துறை பிரபலங்கள் இன்று விருந்து அளித்து கவுரவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி
சத்யா நாதெள்ளா, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின்
முன்முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள 5 லட்சம்
கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதியை செய்துதர மைக்ரோசாப்ட்
நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்மூலம், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்க
முடியும். தங்களது தாயாரிப்புகளையும், விளைப்பொருட்களையும் விரைவாகவும்,
லாபகரமாகவும் சந்தைப்படுத்த முடியும். மேலும், பல சேவைகளை அவர்கள் இருந்த
இடத்தில் இருந்தவாறே பெற முடியும் எனவும் சத்யா நாதெள்ளா நம்பிக்கை
தெரிவித்தார் மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக