நடிகர் சங்கம் ஒன்றும் யாருடைய குடும்பச் சொத்துமல்ல. விஷால் போன்ற புதியவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார். நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குஷ்பு பேட்டியளிக்கையில், நடிகர் சங்க தேர்தல் பற்றிய தன் நிலையைத் தெரிவித்தார். Nadigar Sangam is not a family property, says Kushbhoo அவர் கூறுகையில், "தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன். நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதியவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை," என்றார்.
tamil.filmibeat.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக