புதன், 30 செப்டம்பர், 2015

நீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு..First in history..நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

ஐகோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகிறது, நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. நேரலையில் விசாரணையை காண உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தலைவர் தர்மராஜ் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கறிஞர் சங்க செயலாளர் ராமசாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு பின் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பால்கனகராஜ் பேட்டியளித்தார். கட்டாய தலைக்கவச உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக எத்தனை காவடியாட்டம் நடைபெற்றது?எங்கே போனது இந்த நீதிமன்ற  அவமதிப்பு மட்டர்?
வழக்கறிஞர்கள் மீதான அவமதிப்பு வழக்கில் கூடுதல் நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரிக்கும் என நீதிபதி தமிழ்வாணன் அறிவித்தார். மேலும் எந்த அமர்வு வழக்கை விசாரிக்கும் என்பது பற்றி தலைமை நீதிபதி முடிவு செய்வார் என பால்கனகராஜ் தெரிவித்தார்.

nakkheeran,in

கருத்துகள் இல்லை: