தணிக்கைக்
குழு "புலி'க்கு "யு' சான்றிதழ் கொடுத்திருந்தது. அதனால் தமிழக அரசின்
வரிவிலக்கு சலுகையைப் பெறுவதற்காக வரிவிலக்கு கமிட்டிக்கு ரெய்டுக்கு
முந்தின நாள்‘"புலி'யைக் காட்டி னார்கள். ஆனால் வன்முறை காட்சிகள்
இருப்பதாக வரி விலக்குக்கு தகுதியில்லை என நிராகரித்துவிட்டனர். இதனால்
""பட விலையில் கொஞ்சம் குறைக்கணும்'' என விநியோகஸ்தர்களும் நெருக்கடி
கொடுத் தனர்."புலி' படத்தில்
உள்ள அரசியல் வசனங்கள் தொடர்பாக விநியோ கஸ்தர்கள் காட்டிய தயக்கத்தை கடந்த
இதழின் ராங்-கால் பகுதியில் எழுதியிருந்தோம். அதன் பின்னணியில் உளவுத் துறை
வேலை இருக்கிறது என்கிற சினிமா வட் டாரத்தினர், கூடு தல் கட்ட ணத்தில்
டிக்கெட் விற்றால் நடவடிக்கை என ஒவ்வொரு மாவட் டத்துக்கும் அரசுத் தரப்பில்
உத்தரவு போடப்பட்டதையும் நினைவுபடுத்தி, ஸ்பெஷல் காட்சிகள் கட்டாகி,
கலெக்ஷன் பாதிக்கப்பட்டதை ஒப்பிட்டுக் காட்டினர். துப்பாக்கி, தலைவா, கத்தி
என விஜய் படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியபோதெல்லாம் அதை பெரிதாக்கும்
வகையிலேயே ஜெ.அரசின் செயல்பாடுகள் இருந்தன.
விஜய்க்கு எதிர்ப்பாகவே செயல்படும் ஜெ. அரசை மீண்டும் சீண்டும் வகையில் புலியின் வசனங்கள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்தப் படத்திற்கு ஜெ. அரசின் எதிர்ப்பு தொடர்ந்தது. வரிவிலக்கு மறுக்கப்பட்டது. ""எல்லாவிதமான பணப் பிரச்சனைகளுக்கும் நான் பொறுப்பேத்துக் கிறேன்''’ என விஜய் கொடுத்த உறுதிமொழியையடுத்து கிளீயரன்ஸ் ஆனது. படம் வெளியானது.
அடுத்த
நாள் அதிகாலைப் பொழுதைத்தான் நடிகர் விஜய்யும் அவரது அப்பாவும் ஆவலோடு
எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், முதல் நாள் (செப்.30) அதிகாலையிலேயே
காலிங் பெல் அழுத்தப்பட்டது. கதவைத் திறந்த வேகத்தில் உள்ளே நுழைந்தார்கள்
வருமான வரித்துறை அதிகாரிகள். மறுநாள் "புலி' படம் ரிலீசாகும் நிலையில்,
விஜய்யின் நீலாங்கரை வீடு மட்டுமல்ல, சாலிகிராமம் அலுவலகம், அடையாறில் உள்ள
வீடு என எல்லா இடங்களிலும் நுழைந்திருந்தனர் அதிகாரிகள்.
"புலி' படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் விருகம்பாக்கம் வீடு, வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகம், மற்றொரு தயாரிப்பாளரான சிபுதமீன் வீடு-அலுவலகம், மறைந்த டைரக்டர் ராம.நாராயணன் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள ஃபைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு இவற்றுடன் விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வீட்டிலும் ரெய்டு நடந்தது. மொத்தமாக 150 அதிகாரிகள் கொண்ட டீம் "புலி' டீமை அலற வைத்தது. விஜய்யும் அவர் மனைவி சங்கீதாவும் நிலைமையை கூலாகக் கையாண் டாலும், இந்த திடீர் ரெய்டு அவர்களை ரொம்பவே யோசிக்க வைத்தது. "புலி'யோட ஓனர் யாரு?
""புலி’ படத்தின் தயாரிப்புச் செலவு... என்ற பெயரில் நூற்று பதினெட்டுக் கோடி ரூபாய் கையாளப்பட்டதாக கணக்கு வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு "புலி'யின் ஒரிஜினல் தயாரிப்பாளர் யார்? என்கிற பலத்த கேள்வி எழுந்தது. விஜய் இந்தப் படத்தை தயாரித்தாரா? எனவும் சந்தேகப்பட்டனர். விஜய்யின் படங்களை கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தர் சிபு தமீன், விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பிடி.செல்வக்குமாருடன் சிபுவுக்கு நட்பு ஏற்பட்டது. இதனடிப் படையில்தான் சிபுவையும், தனது விசுவாச ஊழியரான செல்வக்குமாரையும் "புலி'’படத்தின் தயாரிப்பாளர்களாக்கினார் விஜய். மதுரைக்காரரான அன்பு எந்த ஆட்சி வந்தாலும் அமைச்சர்களின் தொடர்புடன் ஃபிலிம் இன்டஸ்ட்ரியில் கோலோச்சுபவர். தற்போது அவரது தரப்பில் 300சி இன்டஸ்ட்ரியில் புரள்வதால், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இவரது பங்களிப்பின்றி நடக்காது. அதனால், அன்புவின் மதுரை, சென்னை அலுவலகங்கள்-வீடுகள் எல்லாமும் வருமான வரித்துறையினரால் குறி வைக்கப்பட்டது.
முன்பெல்லாம் பட ரிலீஸ் என்றால் படப்பெட்டி டெலிவரி நடக்கும். இப்போது சேடிலைட் மூலம் படம் ரிலீ ஸாகிறது. படம் வாங்கியவர்கள் அதற்கான பணத்தை தயா ரிப்பாளரிடம் கொடுத்த பிறகு ஒவ்வொரு ரிலீஸ் சென்ட ருக்கும் கே.டி.எம். எனப்படும் ரகசியக் குறியீடு வழங்கப்படும்."புலி'’தயாரிப்பாளர்கள் ரெய்டில் சிக்கியதால் அவர் களிடம் விநியோகஸ்தர்கள் பணத்தைக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனாலும், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சேரவேண்டிய செட்டில்மெண்ட் நடக்காததாலும் "புலி'’படத் தின் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளான... காலை ஐந்து மற்றும் எட்டு மணி காட்சிகள் ரத்து செய் யப்பட்டன. 700, 1000 ரூபாய்க்கு டிக்கெட் விற் பனையாகியிருந்த நிலையில், அத்தனை கலெக்ஷ னையும் ரிட்டன் பண்ண வேண்டியதாயிற்று. இதனால் படம் வெளியாகாதோ... என்கிற பதட்டமும் இருந்தது. ரசிகர்கள் பல இடங்களிலும் ரகளையில் ஈடுபட, போலீஸ் விரட்டியடித்தது.
படத்தின் வெளியீட்டுக்கு முன்பு... அந்தப் படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர்கள் கிளீயரன்ஸ் சர்டிபிகேட் கொடுத்தால்தான் லேப்பிலிருந்து ரிலீஸுக் கான க்ரீன் சிக்னல் கிடைக்கும். ஃபைனான்ஸியர்கள் சந்திரபிரகாஷ் ஜெயினிடமிருந்து 8 கோடி ரூபாயும், விஜய் கோத்தாரியிடமிருந்து 7 கோடி ரூபாயும் "புலி'’படத் தயா ரிப்பாளர்களால் ஃபைனான்ஸ் வாங்கப்பட்டி ருந்தது. இவர்களிடமிருந்து கிளீய ரன்ஸ் சர்டிபிகேட் வரவில்லை."வாலு'’பட வெளி யீட்டுக்கு விஜய் உதவியதால்... லேப்பில் நடந்த "புலி'’ வெளி வருவதற்கான பேச்சுவார்த்தையில் டி.ஆர். கலந்துகொண்டார். இன் னொருபுறம்... தயாரிப்பாளர்கள் சங்க பிரமுகர்களும் வடபழநி ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து ‘படம் தடங்கலில்லாமல் வருவதற் கான பேச்சுவார்த்தையை விடிய விடிய நடத்தினார்கள்.
300 கோடி ரூபாய் பட்ஜெட்டிலான "பாகுபலி' படத்திற்கு ரெய்டு எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பாதுகாவலனாக சந்திரபாபு நாயுடு இருந்தார் என்கிற மத்திய அரசு வட்டாரம், புலியை மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசின் வருமானவரித்துறையும் குறி வைத்ததன் பின்னணியை விளக்கியது. செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னை வந்த பா.ஜ.க நிர்வாகி முரளிதரராவ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். "அமித்ஷா விருப்பப்படுகிறார். விஜய் எங்க பக்கம் வர முடியுமா' எனக் கேட்டிருக்கிறார். "விஜய்யின் எதிர்கால அரசியல் நடவடிக்கை களில் நான் முடிவெடுக்க முடியாது' என எஸ்.ஏ.சி சொல்லிவிடவே, அமித்ஷா தரப்பிலிருந்து விஜய்யைத் தொடர்பு கொண்டு அழைத் துள்ளனர். நேரடியாக பா.ஜ.க வுக்கு வராவிட்டாலும் பிர தமர் மோடியின் திட்டங்களை புரமோட் செய்த கமல், சச்சின் போல பங்கேற்க அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. விஜய் அதற்கு சம்மதிக்கவில்லை. மீண்டும் நினைவூட்டியபோதும் ரெஸ்பான்ஸ் இல்லை. இந்த நிலையில்தான். படத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடந்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் வருமானவரித்துறை ஆட்களும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பங் கெடுத்து, படத்தின் பட்ஜெட், ஃபைனான் சியர்கள் விவரங்களைத் தெரிந்துகொண்டு, படம் வெளியாவதற்கு முதல் நாள் கதிகலக்கி விட்டார்கள் என் றது மத்திய அரசு வட்டாரம்.
-இரா.த.சக்திவேல்,
தாமோதரன் பிரகாஷ் விகடன்.com
விஜய்க்கு எதிர்ப்பாகவே செயல்படும் ஜெ. அரசை மீண்டும் சீண்டும் வகையில் புலியின் வசனங்கள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்தப் படத்திற்கு ஜெ. அரசின் எதிர்ப்பு தொடர்ந்தது. வரிவிலக்கு மறுக்கப்பட்டது. ""எல்லாவிதமான பணப் பிரச்சனைகளுக்கும் நான் பொறுப்பேத்துக் கிறேன்''’ என விஜய் கொடுத்த உறுதிமொழியையடுத்து கிளீயரன்ஸ் ஆனது. படம் வெளியானது.
"புலி' படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் விருகம்பாக்கம் வீடு, வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய அலுவலகம், மற்றொரு தயாரிப்பாளரான சிபுதமீன் வீடு-அலுவலகம், மறைந்த டைரக்டர் ராம.நாராயணன் அலுவலகம், தியாகராய நகரில் உள்ள ஃபைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு இவற்றுடன் விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு வீட்டிலும் ரெய்டு நடந்தது. மொத்தமாக 150 அதிகாரிகள் கொண்ட டீம் "புலி' டீமை அலற வைத்தது. விஜய்யும் அவர் மனைவி சங்கீதாவும் நிலைமையை கூலாகக் கையாண் டாலும், இந்த திடீர் ரெய்டு அவர்களை ரொம்பவே யோசிக்க வைத்தது. "புலி'யோட ஓனர் யாரு?
""புலி’ படத்தின் தயாரிப்புச் செலவு... என்ற பெயரில் நூற்று பதினெட்டுக் கோடி ரூபாய் கையாளப்பட்டதாக கணக்கு வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு "புலி'யின் ஒரிஜினல் தயாரிப்பாளர் யார்? என்கிற பலத்த கேள்வி எழுந்தது. விஜய் இந்தப் படத்தை தயாரித்தாரா? எனவும் சந்தேகப்பட்டனர். விஜய்யின் படங்களை கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தர் சிபு தமீன், விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பிடி.செல்வக்குமாருடன் சிபுவுக்கு நட்பு ஏற்பட்டது. இதனடிப் படையில்தான் சிபுவையும், தனது விசுவாச ஊழியரான செல்வக்குமாரையும் "புலி'’படத்தின் தயாரிப்பாளர்களாக்கினார் விஜய். மதுரைக்காரரான அன்பு எந்த ஆட்சி வந்தாலும் அமைச்சர்களின் தொடர்புடன் ஃபிலிம் இன்டஸ்ட்ரியில் கோலோச்சுபவர். தற்போது அவரது தரப்பில் 300சி இன்டஸ்ட்ரியில் புரள்வதால், பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இவரது பங்களிப்பின்றி நடக்காது. அதனால், அன்புவின் மதுரை, சென்னை அலுவலகங்கள்-வீடுகள் எல்லாமும் வருமான வரித்துறையினரால் குறி வைக்கப்பட்டது.
ரத்தான காட்சிகள்!
முன்பெல்லாம் பட ரிலீஸ் என்றால் படப்பெட்டி டெலிவரி நடக்கும். இப்போது சேடிலைட் மூலம் படம் ரிலீ ஸாகிறது. படம் வாங்கியவர்கள் அதற்கான பணத்தை தயா ரிப்பாளரிடம் கொடுத்த பிறகு ஒவ்வொரு ரிலீஸ் சென்ட ருக்கும் கே.டி.எம். எனப்படும் ரகசியக் குறியீடு வழங்கப்படும்."புலி'’தயாரிப்பாளர்கள் ரெய்டில் சிக்கியதால் அவர் களிடம் விநியோகஸ்தர்கள் பணத்தைக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனாலும், படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சேரவேண்டிய செட்டில்மெண்ட் நடக்காததாலும் "புலி'’படத் தின் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சிகளான... காலை ஐந்து மற்றும் எட்டு மணி காட்சிகள் ரத்து செய் யப்பட்டன. 700, 1000 ரூபாய்க்கு டிக்கெட் விற் பனையாகியிருந்த நிலையில், அத்தனை கலெக்ஷ னையும் ரிட்டன் பண்ண வேண்டியதாயிற்று. இதனால் படம் வெளியாகாதோ... என்கிற பதட்டமும் இருந்தது. ரசிகர்கள் பல இடங்களிலும் ரகளையில் ஈடுபட, போலீஸ் விரட்டியடித்தது.
படத்தின் வெளியீட்டுக்கு முன்பு... அந்தப் படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர்கள் கிளீயரன்ஸ் சர்டிபிகேட் கொடுத்தால்தான் லேப்பிலிருந்து ரிலீஸுக் கான க்ரீன் சிக்னல் கிடைக்கும். ஃபைனான்ஸியர்கள் சந்திரபிரகாஷ் ஜெயினிடமிருந்து 8 கோடி ரூபாயும், விஜய் கோத்தாரியிடமிருந்து 7 கோடி ரூபாயும் "புலி'’படத் தயா ரிப்பாளர்களால் ஃபைனான்ஸ் வாங்கப்பட்டி ருந்தது. இவர்களிடமிருந்து கிளீய ரன்ஸ் சர்டிபிகேட் வரவில்லை."வாலு'’பட வெளி யீட்டுக்கு விஜய் உதவியதால்... லேப்பில் நடந்த "புலி'’ வெளி வருவதற்கான பேச்சுவார்த்தையில் டி.ஆர். கலந்துகொண்டார். இன் னொருபுறம்... தயாரிப்பாளர்கள் சங்க பிரமுகர்களும் வடபழநி ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து ‘படம் தடங்கலில்லாமல் வருவதற் கான பேச்சுவார்த்தையை விடிய விடிய நடத்தினார்கள்.
நெருக்கடியை அதிகமாக்கிய ஜெ. அரசு
300 கோடி ரூபாய் பட்ஜெட்டிலான "பாகுபலி' படத்திற்கு ரெய்டு எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பாதுகாவலனாக சந்திரபாபு நாயுடு இருந்தார் என்கிற மத்திய அரசு வட்டாரம், புலியை மாநில அரசுடன் சேர்ந்து மத்திய அரசின் வருமானவரித்துறையும் குறி வைத்ததன் பின்னணியை விளக்கியது. செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னை வந்த பா.ஜ.க நிர்வாகி முரளிதரராவ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். "அமித்ஷா விருப்பப்படுகிறார். விஜய் எங்க பக்கம் வர முடியுமா' எனக் கேட்டிருக்கிறார். "விஜய்யின் எதிர்கால அரசியல் நடவடிக்கை களில் நான் முடிவெடுக்க முடியாது' என எஸ்.ஏ.சி சொல்லிவிடவே, அமித்ஷா தரப்பிலிருந்து விஜய்யைத் தொடர்பு கொண்டு அழைத் துள்ளனர். நேரடியாக பா.ஜ.க வுக்கு வராவிட்டாலும் பிர தமர் மோடியின் திட்டங்களை புரமோட் செய்த கமல், சச்சின் போல பங்கேற்க அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது. விஜய் அதற்கு சம்மதிக்கவில்லை. மீண்டும் நினைவூட்டியபோதும் ரெஸ்பான்ஸ் இல்லை. இந்த நிலையில்தான். படத்தின் இறுதிக்கட்டத்தின் போது நடந்த ஒரு விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் வருமானவரித்துறை ஆட்களும் அடையாளம் காட்டிக் கொள்ளாமல் பங் கெடுத்து, படத்தின் பட்ஜெட், ஃபைனான் சியர்கள் விவரங்களைத் தெரிந்துகொண்டு, படம் வெளியாவதற்கு முதல் நாள் கதிகலக்கி விட்டார்கள் என் றது மத்திய அரசு வட்டாரம்.
-இரா.த.சக்திவேல்,
தாமோதரன் பிரகாஷ் விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக