திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நாசாமலையில் சமணர் படுக்கைகள் இருப்பதை
ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.யூ.வனம் அருகே உள்ள நாசா மலையைச்
சுற்றிப்பார்க்க சேவூர் கிராமத்தில் வசிக்கும் ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த
இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது குகைக்குள் இரண்டு சமணர் படுக்கைகள்
மற்றும் துறவிகள் மருத்துவம் பார்த்ததற்கு அடையாளமான குழிகள் இருப் பதும்
தெரியவந்துள்ளது. இது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் அப்பாசாமி தலைமையில் கிராம மக்கள்
சிலர் நேரில் சென்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.
இது குறித்து அப்பாசாமி கூறும் போது, “நாசா மலையில் சுமார் ஆயிரம் அடி
உயரத்தில் குகை உள்ளது. அந்த குகைக்குள் 2 சமணர் படுக்கைகள் உள்ளன.
மூலிகைத் தழைகளை உரலில் இடித்து மருந்து தயாரித்து வைத்தியம் பார்த்ததற்கான
சான்றாக குழி உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு துறவிகள் வாழ்ந்ததற்கான
தடயங்கள் உள்ளன. இந்த இடத்தை தொல்லியல் துறை யினர் ஆய்வு செய்து பாதுகாக்க
வேண்டும். மேலும், சமணர்கள் வாழ்வியல் இடம் குறித்து முழுமையான தகவலை
மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதேபோல், ஆரணி அருகே உள்ள திருமலை
மற்றும் வேலூர் மாவட்டம் வள்ளிமலை, விளாப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள
மலைகளில் சமணர் படுக்கைகள் உள்ளன. அதனால், அந்த பகுதிகளையும் தொல்லியல்
துறையினர் முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்” என்றார். tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக