இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது.
47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.
இன்றைய தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது.
இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், அமையவிருக்கும் பொறிமுறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.bbc.tamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக