வியாழன், 28 நவம்பர், 2013

ஒரு ஷோ ஓடினாலும் போதும் தொலைகாட்சிக்கு விற்று விடலாம் ! ஏராளமான சிறிய பட்ஜெட் படங்கள் திணறல்

ஒரு சில ஷோ ஓடினால்கூடபோதும் என்று படத்தை அவசரமாக ரிலீஸ் செய்வதில் தயாரிப்பாளர்களிடையே போட்டி நிலவுகிறது.
சமீபகாலமாக தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒவ்வொரு வாரமும் நிறைய எண்ணிக்கையிலான படங்கள் ரிலீஸ் ஆகி மார்க்கெட்டை திணற வைக்கிறது. இதனால் ரசிகர்கள் எந்த படத்தை பார்ப்பது என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். படத்தை ரிலீஸ் செய்தால்போதும் அதை வைத்து தொலைக்காட்சி உரிமையை விற்கலாம், அரசு விருதுக்கு அனுப்பலாம் என்ற போட்டிதான் காரணம் என்று கூறப்படுகிறது.
படம் ஓடுகிறதோ இல்லையோ எந்த ஊரிலாவது ஒரு சில தியேட்டரில் தினசரி ஒரு ஷோ மட்டும் ஓடினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 330 நாட்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது.  வரும் டிசம்பருக்குள் இன்னும் 20 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. வரும் வெள்ளியன்று அப்பாவின் கல்யாணம், என்னாச்சு, ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம், விடியும் முன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: