
தியேட்டர்களில்

திரையிட மறுப்பதால் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி கிடக்கின்றன.
சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு ரூ.60 லட்சம் முதல் ரூ.1½ கோடிவரை சிறு
பட்ஜெட் படங்கள் தயாராயின. கோவை, சேலம், மதுரை போன்ற நகரங்களிலும் ஸ்டில்
கேமராவை வைத்து படங்கள் எடுத்து அங்குள்ள சாதாரண லேப்களிலேயே டப்பிங்,
எடிட்டிங் பணிகளை செய்தனர்.
படங்களை முடித்துவிட்டு ரிலீசுக்கு வந்தபோதுதான் பயங்கரம் அவர்களுக்கு
புரிந்தது. சிறு படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை.
தியேட்டர்களிலும் இப்படங்களை திரையிட மறுத்தனர்
சென்னையில் உள்ள தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படங்கள் மட்டுமே
திரையிடப்படுகின்றன. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் இந்த படங்களையே
திரையிடுகிறார்கள். சிறு பட்ஜெட் படங்களை சென்னையில் பார்க்கவே முடியாது.
வெளி மாவட்ட தியேட்டர்களிலும் சிறு பட்ஜெட் படங்கள் திரையிட
மறுக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான படங்கள் பெட்டிக்குள்ளேயே சுருண்டு கிடக்கிறது.
சுமார் 300 படங்கள் இதுபோல் முடங்கி கிடப்பதாக விநியோகஸ்தர் சங்க செயலாளர்
கலைப்புலி சேகரன் தெரிவித்தார். இந்த படங்களுக்கான தயாரிப்பு செலவு ரூ.200
கோடி இருக்கும் என்கின்றனர். படங்கள் எடுக்கும் கனவோடு வந்து பணத்தை
முதலீடு செய்து விட்டு அதை திருப்பி எடுக்க முடியாமல் புது பட
தயாரிப்பாளர்கள் தவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
முடங்கி கிடக்கும் படங் களை ரிலீஸ் செய்வதற்கு திரைப்பட துறையின் அனைத்து
சங்கங்களும் ஆவண செய்ய வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக