வியாழன், 28 நவம்பர், 2013

தருண் தேஜ்பால் வீட்டில் சேதம் ஏற்படுத்திய BJP தலைவர் மீது குண்டர் சட்டம்

தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் மீது அவரது நிறுவனத்தில் வேலைபார்த்த இளம் பெண் நிருபர் பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த புகாரை அலுவலக மட்டத்திலேயே பேசித் தீர்த்துக்கொள்ள உள்ளதாக தெகல்கா பத்ரிக்கையின் ஆசிரியர் சோமா சவுத்ரி தெரிவித்தார். இது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று தேசிய பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இன்று சோமா சவுத்ரி பத்திரிக்கை ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினருடன் சென்ற டெல்லி துணைத்தலைவரும் செய்தித்  தொடர்பாளருமான விஜய் ஜோலி, சோமா சவுத்ரியின் வீட்டில் இன்று போராட்டம் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், போலீசார் முன்னிலையில் சோமா சவுத்ரியின் வீட்டில் இருந்த பலகையில் குற்றவாளி என்று எழுதி அவப்பெயரை ஏற்படுத்தியதுடன், தரையில் தார்பூசி சேதம் ஏற்படுத்தினார்.


மேலும் தெகல்கா நிறுவனர் தருண் தேஜ்பாலைக் காப்பாற்ற, வழக்கை திசைதிருப்ப பார்க்கிறார் என்று விஜய் ஜோலி கோஷமிட்டார். இதையடுத்து சோமா சவுத்ரியின் வீட்டில் சேதம் ஏற்படுத்தியதாக தேசிய பெண்கள் அமைப்பினர் விஜய் ஜோலி மீது போலீசில் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரை அடுத்து டெல்லி போலீசார் விஜய் ஜோலி மீது குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ், வழக்கு பதிவு செய்தனர். எனவே, அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: