டெல்லி அருகே நொய்டாவில் கடந்த 2008-ம் ஆருஷி மற்றும் அவரது
வீட்டு வேலைக்காரர் ஹேமராஜ் கொலை வழக்கில் ஆருஷியின் பெற்றோரான டாக்டர் ராஜேஷ் தல்வார்-நூபுர் தல்வார் ஆகியோருக்கு காசியாபாத் சி.பி.ஐ. கோர்ட் நேற்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் நேற்று காசியாபாத் தஸ்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். நன்றாக தூங்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறிய அறிவுரையை ஏற்காமல், சிறைச்சாலையில் நேற்றிரவு முழுவதும் அவர்கள் நாவல் படித்துக்கொண்டிருந்தனர். இனி சிறையில் உள்ள மருத்துவமனையில் ராஜேஷ் தல்வார் மருத்துவராகவும், நூபுர் தல்வார் சிறையில் உள்ள பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ஆசிரியையாகவும் பணிபுரிவார்கள் என்று சிறை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்காக அவர்களுக்கு தினந்தோறும் 40 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றும் கூறினர். பல கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், இந்த மருத்துவ ஜோடியானது தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக