சனி, 30 நவம்பர், 2013

தமிழகத்தில் மின்வெட்டுக்கு ஜெயலலிதாதான் காரணம் ! திமுகவின் திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டு குத்துது குடையுது ?



திமுக ஆட்சியில் 1800 மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.7850 கோடி நிதியை கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இந்த பணி 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் உரிய முயற்சியை எடுத்திருந்தால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் செய்திருக்கலாம். தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் என்பதால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கினார். கக்கன்காலனி, உடையாப்பட்டி, அயோத்தியாபட்டணம், மாசிநாயக்கன்பட்டி, ஜலகண்டாபுரம்  ஆகிய இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து வந்து 4 மணி நேரம் பிரசாரம் செய்துள்ளார். ஒரு முதல்வர் வருகையால் நெடுஞ்சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை தெருவில் நிற்க வைத்து அழகு பார்த்துள்ளனர். ஏற்காடு தொகுதி மக்கள் மட்டும் கூடினால் கூட்டத்தை காட்ட முடியாது என்பதால், வெளி மாவட்டத்தில் இருந்து ஆட்களை கூட்டி வந்து காட்டினர். பெண்களுக்கு ரூ.200ம், ஆண்களுக்கு ரூ.300ம், பிரியாணி பொட்டலமும் தரப்பட்டுள்ளது. ஏற்காடு தொகுதி அதிமுக கோட்டை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

யாருடைய கோட்டை என்று இந்த தேர்தல் முடிந்ததும் தெரியும். இந்த தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தான் அதிமுக கோட்டை என்பதா?. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்வதற்கானது. இத்தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும். இடைத்தேர்தலுக்கு முன்பு அனைத்து இடங்களிலும் 10 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் 2 மணி நேர மின்வெட்டு தான் இருந்தது.

திமுக ஆட்சியில் 1800 மெகாவாட் மின் உற்பத்திக்கு ரூ.7850 கோடி நிதியை கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இந்த பணி 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரானதும் உரிய முயற்சியை எடுத்திருந்தால், தற்போது தமிழகத்தில் மின்வெட்டு இல்லாமல் செய்திருக்கலாம். தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் என்பதால் இத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனங்களுடன் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் 4000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஜெயலலிதா ஆட்சி அதை கிடப்பில் போட்டுள்ளது. இப்போது மின் பற்றாக்குறைக்கு மத்திய அரசு தான் காரணம் என்று நாடகம் நடத்துகிறார். 2012ம் ஆண்டில் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸீ8000 கோடிக்கு மின் திட்டத்தை அறிவித்தார்.

இதற்காக சல்லி காசு கூட செலவழிக்கவில்லை. நேற்று பிரசாரத்தில் பேசிய முதல்வர், மின்வெட்டுக்கு மத்திய அரசும், தலைவர் கருணாநிதியும் கூட்டு என அபாண்டமாக குற்றச் சாட்டு கூறியுள்ளார். மாற்றம் வேண்டும் என்பதற்காக மக்கள் அவரை தேர்ந்தெடுத்தனர், ஆனால் அந்த மக்களை ஜெயலலிதா ஏமாற்றிவிட்டார். ஜெயலலிதா வுக்கு திமுகவை குறை கூற அருகதை இல்லை. அவர் அபாண்டமாக பொய் பிரசாரம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

உண்மை நிலை மக்களுக்கு தெரியும். எனவே சிந்தித்து திமுக வேட்பாளர் மாறனுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து அவர், மேட்டுப்பட்டி தாதானூர் உள்ளிட்ட 21 இடங்களில் வேட்பாளர் மாறனை ஆதரித்து பிரசாரம் செய்தார். வாகனங்களில் போலீஸ் சோதனை: உடையாப்பட்டி சோதனைசாவடியில் மு.க.ஸ்டாலினின் வாகனத்தை போலீசார் மறித்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் மு.க.ஸ்டாலினின் பிரசார வேனில் ஏறி சோதனையிட்டனர். தொடர்ந்து அவரது வாகனத்திற்கு பின்னால் வந்த திமுக நிர்வாகிகளின் வாகனங்களையும் போலீசார் சோதனையிட்டனர்.

அமைச்சர் கைது செய்யப்படுவாரா?

ஏற்காடு தொகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அயோத்தியாபட்டணத்தில் பேசியதாவது: எல்லோர் மீதும் வழக்கு போடுகிறார்கள். தைரியம் இருந்தால் என்னை நீதிமன்றத்திற்கு இழுத்து பார்க்கட்டும். நான் வாய்தா வாங்கமாட்டேன். தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை நடக்கிறது. ஆனால் இந்த ஆட்சியில் நில அபகரிப்பு என திமுகவினர் கைது செய்யப்படுகிறார்கள். ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மீது நில அபகரிப்பு புகார் வந்துள்ளது. அவரை கைது செய்வாரா? முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.dinakaran.com

கருத்துகள் இல்லை: