திங்கள், 25 நவம்பர், 2013

ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு மெடிக்கல் ரெப்ரசென்டேட்சிவ் : ஆந்திராவிலும் அட்டூழியம்?

பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் பற்றி துப்பு கிடைத்துள்ளது: ஆந்திராவிலும் அட்டூழியம்?ஹைதராபாத்: பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரியை தாக்கி பணம் பறித்த நபர் ஆந்திர மாநில ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தபோது சிசிடிவி கேமராவில் அவரது உருவம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அந்த நபர் ஒரு மெடிக்கல் ரெப்ரசென்டேட்சிவ் என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் கடந்த 19ம் தேதி ஜோதி உதய்குமார்(38) என்ற வங்கி அதிகாரியை மர்ம நபர் ஒருவர் அரிவாள் மற்றும் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். பின்னர் ஜோதியின் தலையில் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு ஷட்டரை மூடிவிட்டு அந்த நபர் ஓடிவிட்டார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜோதி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜோதியின் செல்போனை அந்த நபரிடம் இருந்து வாங்கியவர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரியில் பொதுத் துறை வங்கி ஒன்று தங்களின் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பணம் எடுத்த நபர் ஜோதியை தாக்கிய நபர் போன்று இருப்பதாக சிசிடிவி வீடியோவில் பதிவானதை பார்த்துவிட்டு தெரிவித்துள்ளது. அந்த நபர் பெங்களூர் தாக்குதல் சம்பவத்தின்போது அணிந்திருந்த அதே சட்டை அணிந்திருந்ததுடன், அதே பையை வைத்துள்ளார்.
ஆந்திர வங்கி பெங்களூர் வங்கிக்கு இந்த தகவலை தெரிவித்தது. இதையடுத்து அந்த வீடியோவை வாங்க பெங்களூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் பெங்களூர் போலீசார் ஆந்திர வங்கியுடன் தொடர்பில் உள்ளனர். ஜோதியை தாக்கிய நபர் கடந்த 10ம் தேதி அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரத்தில் ஒரு மூத்தாட்டியை கொன்றுவிட்டு அவரது மகனின் ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை எடுத்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த நபர் ஒரு மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ் என்று கூறப்படுகிறது   tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: