லுவாண்டா: உலக நாடுகளிலேயே முதல் முறையாக இஸ்லாத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. அத்துடன் மசூதிகளையும் மூடுவதற்கும் இடிப்பதற்கும் அந்நாடு நாடு உத்தரவிட்டிருப்பது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அங்கோலா நாட்டின் கலாசார துறை அமைச்சர் ரோசா க்ரூஸி சில்வா கூறுகையில், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இஸ்லாத்துக்கு அங்கோலாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை மசூதிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தடையின் ஒருபகுதியாக நாடு முழுவதும் இருக்கும் மசூதிகள் இடிக்கப்படும். இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அங்கோலா அதிபர் ஜோஸே ஈடுர்டோ, இந்த நாட்டில் இஸ்லாமிய செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார். tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக