
A Saudi professor and campaigner, Aziza Youssef, said the activists have received 13 videos and another 50 phone messages from women showing or claiming they had driven, the Associated Press reported.
She said it had not been not possible to verify all of the messages. But, if the numbers are accurate, they would make Saturday's demonstration the biggest the country has ever seen against the ban.
சவுதியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற இருந்த ‘பெண்கள் காரோட்டும் போராட்டம்’ கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி உட்துறை அமைச்சு, “சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக எந்தவொரு பெண் காரில் டிரைவர் ஆசனத்தில் பொது இடத்தில் காணப்பட்டாலும், உடனே கைது செய்யப்படுவார். இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது” என நேற்று அறிவித்திருந்தது.
சவுதியில் பெண்கள் டிரைவ் செய்வது, சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் டிரைவ் செய்யும் பெண்கள் சட்டவிரோத நடவடிக்கைக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் அந்நாட்டு சட்டம் கூறுகிறது.
இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சில பெண்கள் அமைப்புகள், பெண்கள் வாகனம் செலுத்தும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதையடுத்தே இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உட்துறை அமைச்சு அறிவித்தது.
சவுதி பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த நஜ்லாஅல்-ஹரிரி, “பெண்கள் வாகனம் செலுத்தும் அடையாளப் போராட்டம் அக்டோபர் 26-ம் தேதி நடைபெறும் என நாம் செய்த அறிவிப்பு மாற்றப்படுகிறது. வாகனம் செலுத்துவதற்காக குறிப்பிட்ட இடத்துக்கு பெண்கள் இன்று வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது 1 நாள் அடையாள போராட்டம்தான். அந்த போராட்டம் இப்போது ‘திறந்த போராட்டமாக’ மாற்றப்பட்டுள்ளது. அதாவது, எந்த நாளும் வாகனம் செலுத்தும் போராட்டம். இன்று முதல் பெண்கள், சவுதியின் எந்த இடத்திலும், எந்த நாளிலும் வாகனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக