வெள்ளி, 1 நவம்பர், 2013

பாட்னா குண்டுவெடிப்பு குற்றவாளி தப்பி ஓட்டம் ! தேர்தல் நேரத்தில் தப்பிக்க விடும் காங்கிரஸ் கலாசாரம் !

பாட்னா: பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பங்கேற்ற பாட்னா பீகார் போலீசார் விசாரித்த இந்த வழக்கு, அதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணைக்கு மாற்றப்பட்டது. குண்டுகள் வைத்த சதிகாரர்கள், 'இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாதிகள் என்று அறிவித்த தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணை மேற்கொண்டதில், நான்கு பேர் சிக்கினர். நேற்று, டில்லி விமான நிலையத்தில், முகமது அப்சல் என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர் பிடித்துள்ளனர்.
பொதுக் கூட்டத்தில், குண்டுகள் வைத்த பயங்கரவாதி, கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.,) பிடியில் இருந்த போது, தப்பி ஓடியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி நிகழ்ச்சியில் நடந்ததால், என்.ஐ.ஏ., அசட்டையாக விசாரணை மேற்கொள்வதாக, குற்றச் சாட்டு எழுந்துள்ளது.கடந்த ஞாயிறு அன்று, பீகார் தலைநகர் பாட்னாவில், குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற, தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அதில், ஏராளமான குண்டுகள் வெடித்தன. இதில், ஐந்து பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாட்னாவில் பயங்கர குண்டுகள் வெடித்தபோது, மும்பையில் சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, தேசிய புலனாய்வு அமைப்பினரை அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொள்ளச் செய்தார். இந்த "தப்பிக்க விடும் கலாச்சாரம்" அதிகரித்துள்ளது...அதுவும் தேர்தல் நேரத்தில் ............மக்களை யோசிக்க வைத்துள்ளது....




ரகசிய விசாரணை:
முன்னதாக சிக்கிய, மெகர் ஆலம், இம்தியாஸ் அகமது, அர்ஷத் அகமது உட்பட, நான்கு பேரிடம், தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாட்னாவில், தேசிய புலனாய்வு அமைப்பினர் பிடியில், விசாரணையில் இருந்த மெகர் ஆலம், நேற்று முன்தினம் இரவில் தப்பி ஓடிவிட்டான். சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிய அவனை, அனுப்பி விட்டு, காவல் காத்த புலனாய்வு அமைப்பினரை, ஏமாற்றிவிட்டு, அவன் தப்பிச் சென்று விட்டான். இந்தத் தகவல் நேற்று தான், வெளியே கசிந்தது. இது குறித்து, பாட்னா போலீசில், என்.ஐ.ஏ., புகார் அளித்ததை அடுத்து தான், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மோடி கூட்டத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் வழக்கை, துவக்கம் முதலே அசட்டையாக விசாரித்து வந்த, என்.ஐ.ஏ., வசம் இருந்த பயங்கரவாதி தப்பியது, என்.ஐ.ஏ.,வின் விசாரணை மீது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.



ஆய்வு இல்லை:
பாட்னாவில் மோடி கூட்டம் நடந்து முடிந்த பிறகு, இரண்டு நாட்கள் கழித்து, பத்துக்கும் மேற்பட்ட பயங்கர வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பயங்கர சம்பவம் நடந்த இடத்தைக் கூட, என்.ஐ.ஏ., சரிவர ஆய்வு செய்யவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 'பா.ஜ., பிரதமர் வேட்பாளர், மோடி கூட்டத்தில் குண்டு வெடித்ததால், என்.ஐ.ஏ., இவ்வளவு அசட்டையாக இருக்கிறதா... காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் கூட்டத்தில் இவ்வாறு குண்டுகள் வெடித்திருந்தால், என்.ஐ.ஏ., இவ்வளவு அசட்டைத்தனமாக விசாரணை மேற்கொள்ளுமா?' என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

கருத்துகள் இல்லை: