செவ்வாய், 29 அக்டோபர், 2013

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு இலங்கை பெண் உரிமையாளர்கள் கோரிக்கை!


வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட
ரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்;கள் அரசியல் அககடமி என்ற அமைப்பு கோரிக்கை
விடுத்துள்ளது. நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சுற்றலாத்துறையில் பாலியல் தொழில் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் திட்டப் பணிப்பாளர் டொக்டர் நிமால்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பெண்களின் நலனைக் கருத்திற் கொண்டு பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டமென அவர் வலியுறுத்தியுள்ளார் சுகாதார அமைச்சும் மகளிர் விவகார அமைச்சும் பெண்களின் பால் நிலை சுகாதாரம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் 47000 பெண் தொழிலாளிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிரமமான கண்காணிப்பு முறைமை இன்றி பாலியல் தொழிலாளிகளை கட்டுப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.athirady.

கருத்துகள் இல்லை: