வெள்ளி, 1 நவம்பர், 2013

சஹாராவை கடக்க முயன்றபோது தண்ணீர் கிடைக்காததால் 92 பலி!


அல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டிரக்கில் அல்ஜீரியாவின் டமாரன்ராசெட் நகருக்கு அகதிகளாக சென்றனர். சகாரா பாலைவனத்தை கடந்து செல்லும் போது நைஜர் வடபகுதியான அர்லிட் நகரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் டிரக் ஒன்று பழுதானது. (Death in the desert: A graphic showing where the bodies of 87 migrants were found in Niger after two vehicles taking them to Algeria broke down before reaching the border)
இதனால் பாலைவனத்தில் சிக்கிய அகதிகளால் மணல் பரப்பில் நீண்ட தூரம் நடந்து செல்ல முடியவில்லை. தண்ணீர் கிடைக்காமல் நாக்கு வறண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் இறந்தனர்.
முதல் கட்டமாக கடந்த 28ம் தேதி சடலங்கள் மீட்கப்பட்டன. இதை தொடர்ந்து பாலைவனத்தில் வேறு யாராவது இறந்தார்களா என்று மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சற்று தூரத்தில் மற்றொரு டிரக் பழுதாகி நின்றது. அதில் பயணம் செய்த 52 பேர் இறந்தது தெரிய வந்தது. அழுகிய நிலையில் இருந்த சடலங்கள் மீட்கப்பட்டன.

இதனால் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. பாலைவனத்தில் இறந்தவர்களில் 52 குழந்தைகள், 33 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த வாகனமும் நிறுத்தவில்லை’
தொழில்தேடி புறப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 52 சிறார்களும் 33 பெண்களும் இந்த பாலைவன பயணத்தில் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. வெப்பம் எரிக்கும் பாலைவனத்தில், வாகனம் பழுதடைந்த இடத்திலிருந்து இரண்டு நாட்களாக நடந்துசென்ற தமக்கு, அந்த வழியால் வந்த ஒரு வாகனம் கூட உதவவில்லை என்று உயிர்தப்பிய சிறுமி பிபிசியிடம் கூறினாள்.
வரும்வழியில் உயிரிழந்த தாயையும் இரண்டு சகோதரிகளையும் தானே புதைத்துவிட்டு வந்ததாக அந்தச் சிறுமி தெரிவித்தாள்.
தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்து காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் 3ம் தேதி இத்தாலி லாம்பிதுசா தீவு அருகே அகதிகளின் படகு கடலில் மூழ்கியதில் 300 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Treacherous: The seven men, 32 women and 48 children died of thirst in early October after walking for days in the Sahara desert (above, file picture)   ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: