சட்டமன்ற
கூட்டத்தொடர் நடக்கும் ஒவ்வொரு முறையும் அதிமுக உறுப்பினர்கள் எங்களையும்
எங்கள் கட்சியையும் கட்சித்தலைவரையும் ஏதாவது ஒரு குட்டிக்கதைகளை கூறி
இழிவுபடுத்தி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அடி கொடுக்கும் வகையில்
நாங்களும் குட்டிக்கதைகளை கூறமுடியும். ஆனால் பேச வாய்ப்பு
மறுக்கப்படுகிறது.
சட்டசையில்
ஆளும் கட்சிக்கு சாதகமாக பேசும் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த
எம்எல்ஏக்கள் வெளியேற்றப்படுகின்றனர். இத்தகைய செயல் எல்லா
எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதாவே
ஈடுபட்டுள்ளார்.
விரைவில்
அது போன்ற நிகழ்வு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஜெயலலிதா
மக்களுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு எதிர்கட்சிகளை பழிவாங்கும்
நடவடிக்கையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். இத்தகைய போக்கை முதல்வர்
நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளைகளால் சட்டம்
ஒழுங்கு நிலைமை மோசமாகி வருவதைஉணர முடிகிறது என்றார்.
- இரா.பகத்சிங்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக