ஞாயிறு, 27 அக்டோபர், 2013

தமிழ்நாட்டில் வைகுண்டராஜன் மூன்று மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மருதையன் எழுதிய 'மோடி : வளர்ச்சி என்பது முகமூடி' நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னையில் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே உள்ள தர்மபிரகாஷ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நூலை பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலன் வெளியிட்டார். வழக்கறிஞர் பாலன் பேசுகையில், நரேந்திர மோடி என்பதைவிட நரபலி மோடி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். 2002ல் இருந்து 2006 வரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று என்கவுன்டர் செய்து கொன்று குவித்தார். குஜராத்தில் எங்கு பார்த்தாலும் அழிவும், தீக்கிரையுமாக ஒரு கேவலமான நிர்வாகத்தைதான் மோடி நடத்தி வருகிறார். இவர் ஒரு சர்வதேச குற்றவாளி. சைக்கோ. இவரை எந்த நாட்டிற்குள்ளும் வர அனுமதி அளிக்க மறுக்கின்றனர். தன்னுடைய வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரையும் கொல்கிறார். இவருடைய தூண்டுதலால்தான் குஜராத் பல போலீஸ் அதிகாரிகள் தவறுகள் செய்துவிட்டு சிறையில் உள்ளனர். ஆனால் இதுவரை மோடி மீது எந்த ஒருபுகாரும் பதிவு செய்யப்படவில்லை. அவர் செய்யும் ஒவ்வொரு குற்றத்திலிருந்தும், திட்டம் போட்டு தப்பிக்கிறார்.
இவர்களுக்கு மாற்றாக காங்கிரஸ் என்பதும் தவறுதான். அந்த காலத்தில் நாட்டுக்காக தியாகம் செய்தார் பகத்சிங். இந்த காலத்தில் நாட்டையே விற்றுவிட்டார் மன்மோகன் சிங். அமெரிக்கா பெற்ற பிள்ளைதான் மன்மோகன் சிங். அமெரிக்காவின் வளர்ப்பு மகன்தான் ப.சிதம்பரம். ஆகையால் காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளும் ஒன்றுதான் என்றார்.
நூ-ன் ஆசிரியர் மருதையன் ஏற்புரை நிகழ்த்தி பேசுகையில், மோடியை இந்துக்களின் பிரதிநிதி என்று இந்துக்களை ஏமாற்றி வருகிறார்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். 22 வருடமாக பிரச்சனையில் உள்ள அயோத்தி கோயிலுக்கு தீர்வு காண இதுவரை இவர் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. அங்கு கோயில் இடிக்கப்பட்டபோது, முத-ல் கோயிலை கட்ட வேண்டும் என்று சொன்ன மோடி, இப்போது கோயில் வேண்டாம். முத-ல் கழிவறை கட்டுவோம். பிறகு கோயில் கட்டுவோம் என்று இந்துக்களை ஏமாற்றி வருகிறார். அயோத்தியில் ராமனே நடுத்தெருவில் நிற்கிறார். மோடியால் ராமேனே ஏமாற்றப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் வழிதான் மோடியின் வழி. மோடியை முஸ்லீம்களும் ஆதரிக்கிறார்கள் என்று ஒரு மாயையை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர், நிர்வாகத்தில் சிறந்தவர் என்று வடமாநிலங்களில் உள்ளவர்கள் போற்றுகிறார்கள். ஆனால் அவரிடம் எந்த திறமையும் கிடையாது. எங்கள் ஊர் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்வர்களின் பேச்சை அவர்கள் கேட்டதில்லை. இதற்கு மாற்று காங்கிரஸ் கட்சியா என்றால் அதுவும் இல்லை. ஆதார் அட்டை என்ற திட்டம் உலகில் எங்கேயுமே இல்லை. இது உலக வங்கி ஏற்படுத்திய ஒரு திட்டம். இந்த திட்டத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. அனுமதிக்கவும் இல்லை. காங்கிரஸ் தன்னுடைய ஆளுமையை மக்கள் மீது திணிக்கவும், மக்களை கண்காணிக்கவும் இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு தனி மனிதனைப் பற்றிய விபரத்தை சேகரிக்கவே இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சாதாரண வைகுண்டராஜன், மூன்று மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்துகிறார். இதற்கு ஒரு சட்டம் உண்டா. இப்படி இருக்க ஒரு பாசிச ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கையில் வைத்திருக்கும் மோடி ஆட்சிக்கு வந்தால், நாடு என்னவாகும். இந்திய முதலாளிகளுக்கு குஜராத் ஒரு சொர்க பூமியாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அனைத்து பெருமுதலாளிகளையும் மோடி ஆதரிக்கிறார். வடமாநில ஊடகங்கள் மோடியை போற்றுகின்றன. முதலாளிகளுக்கான வளர்ச்சிதான் மோடியின் செயல்பாடு மோடியை நாம் ஆதரித்தால் அவர் செய்த தவறுகளுக்கு நாமே ஒப்புதல் வழங்குவதாக அர்த்தம். குஜராத்தில் முஸ்லீம்களின் நிலை தற்போது டெல்லியில் நடந்த ஒரு பெண்ணின் பாலியல் சம்பவ கொலைபோல்தான் உள்ளது. ஈழத்தமிழர்களுக்காக பாஜக குரல் கொடுப்பது கேலி கூத்தாக உள்ளது. அவர்கள் ஒருபோதும், ஈழத்தமிழர்களுக்கு உதவியது இல்லை. இப்போது அரசயலுக்காக வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன் ஆகியோர் ஈழத்தமிழர்களை காட்டி பாஜகவுக்கு நற்சான்று வழங்குகிறார்கள். பாஜகவின் நிலை நன்கு தெரிந்திருக்கிற வைகோவே இப்படி பேசுவது வெட்கக்கேடானது. மன்மோகன் கொள்கையே மோடியின் கொள்கை. மோடியின் கொள்கையே மன்மோகன் கொள்கை எனவே இரண்டு கட்சிகளும் வெவ்வேறு அல்ல. இப்படிப்பட்ட பாஜகவை வெற்றி பெற நினைத்தால் இந்நாடு குற்றவாளி நாடாக மாற ஒப்புதல் அளிப்பதற்கு சமம். தான்செய்த தவறுகளுக்காக இன்னமும் நிருபர்களை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் பயந்து ஓடும் நபர் மோடிதான் என்றார் காட்டமாக.

படங்கள்: அசோக்

கருத்துகள் இல்லை: