
உள்ளனர். இந்த நிலையில் சரிதாவுக்கும் முகேசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் முகேசுக்கும் கேரளாவில் பிரபல நடன ஆசிரியையாக உள்ள தேவிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். கேரளாவில் உள்ள ரிஜிஸ்டர் அலுவல கத்தில் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். முகேஷ் 2–வது திருமணம் செய்து கொண்டதை அறிந்ததும் நடிகை சரிதா அதிர்ச்சி அடைந்தார். தங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்பட்ட தகவலை மறுத்துள்ள அவர் 2–வது திருமணம் செய்த கணவர் முகேஷ் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக
நடிகை சரிதா விடுத்துள்ள அறிக்கையில்,’’என் மகன் ஷர்வன் துபாயில் மருத்துவ
படிப்பு தொடர்வதால் அங்கு தங்கி இருக்கும் சூழ்நிலையில் உள்ளேன். 2
நாட்களுக்கு முன்பு முகேஷ், தேவிகா என்ற பெண்ணை சட்டவிரோதமாக திருமணம்
செய்து கொண்டதாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன்.
கடந்த
2007–ம் ஆண்டு முதல் அவரிடம் எந்த ஜீவனாம்சமும் இல்லாமல் விவாகரத்து பெற
தயாராக இருந்தேன். அவர் எந்த பதிலும் அளிக்காமல் தொடர்ந்து தட்டிக் கழித்து
வந்தார். மகன்கள் ஷர்வன், தேஜஸ் இருவரும் என்னுடன் இருக்கிறார்கள்.
எந்த
அறிவிப்பும் இல்லாமல் சட்டப்படி விவாகரத்தும் பெறாமல் முகேஷ் திருமணம்
செய்திருப்பதாக வெளிவந்த செய்தி என்னை மிகவும் பாதித்துள்ளது. எனவே முகேஷ்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார் malaimurasu,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக