ஞாயிறு, 27 அக்டோபர், 2013

விளம்பரங்களுக்கு ஒத்துழைக்காத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் ! ஒத்துழைப்பு என்பதை தவறாக விளங்கி கொள்ளவேண்டாம் !

சென்னை:ஆடியோ ரிலீஸுக்கு வராத ஹீரோயின்களுக்கு 20 சதவீதம்
சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழ் படங்களை ரிலீஸ் செய்வதற்கு முன்பு ஆடியோ ரிலீஸ், பட புரமோஷன் விழா என படத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்று சேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஹீரோயின்கள் பங்கேற்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா பட ஆடியோ விழா நடந்தபோது அதில் ஹீரோயினாக நடித்த காஜல் அகர்வால் பங்கேற்கவில்லை, அதேபோல் ‘கோலாகலம் விழாவில் ஹீரோயின் சரண்யா மோகன், ‘உயிர்மொழி படத்தில் கீர்த்தி பங்கேற்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புகார்கள் வந்தன. இது பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் கூறும்போது, ‘படங்கள் வெளிவருவதற்கு முன் அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க புரமோஷன் நிகழ்ச்சிகள் மிக முக்கியம். இந்நிகழ்ச்சிகளுக்கு ஹீரோயின்கள் பெரும்பாலும் வருவதில்லை என்று புகார் வந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்காத ஹீரோயின்களுக்கு 20 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பேசப்பட்ட சம்பளத்தில் 20 சதவீதம் வைத்துக்கொண்டு அந்த நடிகைகள் நிகழ்ச்சி யில் பங்கேற்றால் அப்பணம் தரப்படும். இதுபற்றி நடிகர் சங்கத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஹீரோயின்களின் மேனேஜர்களும் சில சமயம் ஹீரோயின்கள் வராததற்கு காரணமாக இருப்பதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே பிரபல நடிகையின் மேனேஜர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: