வெள்ளி, 1 நவம்பர், 2013

கும்பகோணம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து ! 9 பேர் வெடித்து சிதறினர் ! குழந்தை தொழிலார்களும் அகப்பட்டனர் ?

பட்டாசு தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்து 9 பேர் பலி.கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த முள்ளங்குடி கிராமத்தில் பல வருடங்களாக ராஜாங்கம் என்பவரின் மனைவி தனலெட்சுமி பட்டாசு தயாரிக்கும் தொழில் நடத்தி வருகிறார். இவரது தொழிற்கூடத்தில் 15க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனா இவர் விழாக்கலுக்கும் கிராம திருவிழாக்களுக்கும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் வானங்கள் மற்றும் வெடிகள், பட்டாசுகள் தயாரித்து கொடுப்பது வழக்கம். இதைத் தவிர நாளை தீபாவளியை முன்னிட்டு தற்போது பட்டாசு தயாரிப்பது மும்முரமாக இவரது தொழிற்கூடத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபொழுது எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஆனந்த் (18), த.பெ.செல்வகுமார், வெங்கடேசன் (16)
த.பெ.பாலகிருஷ்ணன், வனிதா (26) க.பெ.சுந்தர் ஆனந்தி (22) த.பெ.சின்னதுரை, ரஞ்சித் (19), குமார் (18) த.பெ.ரமேஷ், ஸ்ரீதர் (ஆகிய 5 பேரும் இந்த விபத்தில் தூக்கி வீசி எறியப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 6 பேர் ஆபத்தான நிலையில் 3 பேர் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கும் மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தொழிற்கூடத்தை சுற்றி வசிப்பிடங்கள் வீடுகள் இல்லாததால் மிகப்பெரும் விபத்து நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது.இந்த தொழிற்கூடத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கும்பகோணம் துணை ஆட்சியர் கோவிந்தராவ் பார்வையிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திடீர் தீ விபத்து குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாளை தீபாவளி கொண்டாட இருக்கும் வேளையில் திடீர் பட்டாசு விபத்தில் 5 பேர் மரணமடைந்தது முள்ளங்குடியைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழத்தியுள்ளது. இவ்விபத்தினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது nakkheeran.in/


கருத்துகள் இல்லை: