சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படம், தமிழகத்தை தவிர, தென்
மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில்
வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது.
"படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை' என்று,
டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.விஜய் - அமலாபால் நடித்த,
"தலைவா' படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000
தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு
தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும்,
இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும்,
"தலைவா' படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா,
கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள்,
ஏமாற்றமடைந்தனர்.கருணாநிதி ஆட்சியில் இவர் திரைப்படம் வெளியிட கருணாநிதி குடும்பத்தார்
முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று இவரும் இவர் தந்தையும் பெரிய சீன்
போட்டு தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள்.
இந்நிலையில், படம் வெளியீடு குறித்து, நேற்று இரவு வரை, தயாரிப்பாளர் நேரடியாக ஏதும் பதில் கூறவில்லை. படத்தை, வரும் 15ம் தேதி வெளியிட, மாற்று ஏற்பாடு நடந்ததாகவும், அன்று சுதந்திர தினம் என்பதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு முழுவதுமாக கிடைக்காது என்பதால், வரும், 22ம் தேதி, படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியானது.
டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கை:"தலைவா' என்ற படம் வெளியாவதை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல்துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன; இச்செய்தியில் உண்மையில்லை. பட வெளியீட்டை தள்ளி வைக்குமாறு, தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிலும், காவல்துறைக்கு பங்கில்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையை சார்ந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
"தலைவா' படம் நேற்று வெளியிடப்படும் என, நினைத்த விஜய் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு நேற்று காலை வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், "படம் இன்று வெளியாகாது' என, ரசிகர்களை திரும்ப அனுப்பினர். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தனர்.புதுக்கோட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்கள், 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில், 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இடைப்பாடி - சேலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆத்தூரில், விஜய் ரசிகர்கள் மறியலில் ஈடுபட முயன்றதோடு, தியேட்டர்களை முற்றுகையிட்டனர். அதனால், தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வேலூர், திருவண்ணாமலையில், விஜய் ரசிகர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களை கலைத்து அனுப்பினர். dinamalar,com

போலீஸ் காரணமில்லை: டி.ஜி.பி., தகவல்:

ரசிகர்கள் கலாட்டா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக