செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

பழங்குடி இந்திய நாடோடிகளை கொன்ற ஹங்கேரியர்களுக்கு தண்டனை ! Who's Killing Hungary's Gypsies?

 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் ஹங்கேரியின் வடகிழக்கில்
தட்டார்சென்ட்கியோர்கி பகுதி கிராமங்களில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட  நாடோடிக் குழுவினர் வசித்து வந்தனர். ஹங்கேரியின் 10 மில்லியன் மக்கள் தொகையில் இவர்களின் சதவிகிதம் ஏழாகும். இனவெறி காரணமாக அர்பட் கிஸ், இஸ்ட்வான் கிஸ், சோல்ட் பெடோ, சோண்டோஸ் என்ற நால்வரும் சேர்ந்து 14 மாதங்களுக்குள் இவர்கள் மீது ஒன்பது முறை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதற்கு இவர்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் போன்றவற்றை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒருமுறை நடத்திய தாக்குதலில், இவர்கள் ஒரு வீட்டிற்குத் தீ வைத்துள்ளனர். அங்கிருந்த நாடோடி தந்து, தனது ஐந்து வயது மகனுடன் தப்பி ஓட முயற்சித்தபோது, அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுபோல் மொத்தம் ஆறு பேர் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல்கள் நாடோடி இன மக்களிடையே பயத்தைத் தூண்டியது. இந்த வன்முறைத் தாக்குதல்கள் ஹங்கேரி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. காவல்துறையினரின் மெத்தனமே இதற்குக் காரணம் என்று அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.


இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, தாக்குதல்களில் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்ட அவர்கள் தாங்கள் கொலைக் குற்றவாளிகள் இல்லை என்று வாதிட்டனர். இவர்களில்
இஸ்ட்வான் கிஸ் மற்றும் சோல்ட் பெடோ ஆகிய இருவரும் தேசிய அளவிலான குற்றங்களிலும் தொடர்புடையவர்களாக இருந்தனர். மேலும், சோண்டோஸ் மட்டுமே காவல்துறையுடன் ஒத்துழைத்ததாகவும், அவர் ஏற்கனவே ராணுவப் புலனாய்வுத்துறைக்கு உதவியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த விசாரணையின் தீர்ப்புகள் தற்போது வெளிவந்துள்ளது. அரசு தரப்பு சாட்சியாக மாறிய சோண்டோசிற்கு 13 வருட சிறைத்தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள்தனடனையும் விதித்து ஹங்கேரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: