சென்னை, ஆறு, ஏரி, கால்வாய்கள் தூர்வாராத காரணத் தால் தண்ணீர் திறந்து விடப்பட்டும் உபரி நீர் கடலில் கலந்து வீணா கிறது.
மழை வெள்ள காலங்களில் காவிரியை, உபரி நீர் கால்வாயாக பயன்படுத்தும், கர்நாடக மாநிலத்தை போல, கொள்ளிடம் ஆற்றை, தமிழகம் பயன்படுத்து வது தொடர்கிறது. நேற்று ஒரே நாளில், கிட்டத்தட்ட நான்கு டி.எம்.சி., தண்ணீர், கொள்ளிடம் வழியாக, கடலில் கலந்து வீணாகி யுள்ளது. முறையான திட் டமிடல் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களின் பாச னத்திற்காக மட்டுமின்றி, பல மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங் குகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்யும் தென் மேற்கு பருவ மழையால், அங்குள்ள, நான்கு அணைகள் முழு கொள்ளளவை எட்டு கின்றன. உபரிநீர் திறக் கப்பட்டு மேட்டூர் அணைக்கு வருகிறது. பலமுறை உச்சநீதிமன் றத்தை அணுகி தண்ணீர் கேட்டும், தர மறுத்து வந்த கர்நாடக அரசு, தமிழகத்தில் பாயும் காவிரியை, உபரிநீர் கால்வாயாக பயன்படுத் துவது, இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி யுள்ளது. காவிரியில், தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளதால், கடந்த, இரு மாதங்களாக வறண்டு கிடந்த மேட் டூர் அணை முழு கொள் ளளவை எட்டி உள்ளது.
இதன், எதிரொலி யாக, காவிரி டெல்டா
மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்
திறக்கப்பட் டுள்ளது. தஞ்சை மாவட் டம், கல்லணை வந்த காவிரி நீர்,
அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலம் பாசனத்திற்கு
செல்கிறது. இது மட்டு மின்றி, அதிகப்படியான நீர் வந்துள்ளதால், கொள்ளிடம்
ஆற்றின் வழியாக, உபரி நீர், வங் காள விரிகுடா கடலுக் கும் அனுப்பி வீணடிக்
கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களி லும், இதே போல், பருவமழையின் போது, தமிழகத்திற்கு கிடைத்த பல டி.எம்.சி., தண்ணீர், வீணடிக்கப்பட்டு உள்ளது. போதுமான மழை இல்லாததால், கொள்ளிடம் ஆறு வறண்டது. அதனால், மணல் குவாரிகளுக்காக, இந்த ஆற்றை அரசு பயன்படுத்தி வருகிறது. கொள்ளிடம் ஆற்றில், தண்ணீரை தேக்குவதற் கான, முறையான திட்ட மிடல் இல்லாததே, இதற்கு காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேட்டூர் அணையை பராமரிப் பதில், மாறி மாறி வந்த அரசுகள், முறையான அக்கறை செலுத்த வில்லை. இதனால், ஆண்டுதோறும் அணை யின் கொள்ளளவு குறைந்துள்ளது ஆய்வின் மூலம் தெரிய வந்துள் ளது. கடந்த 74 ஆண்டு களில், 29.6 சதவீதம் அளவிற்கு அணையின் கொள்ளளவு குறைந் துள்ளது. அதன்படி, 93 ஆயிரம் மில்லியன் கன அடியாக இருந்த அணை யின் கொள்ளளவு, தற்போது, 66 ஆயிரம் மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. கொள் ளிடம் ஆற்றிற்கும் இதே நிலை தான். அதை, உபரிநீர் வெளியேற்ற கால்வாயாக தொடர்ந்து பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த ஆற்றில், ஏழு இடங்களில், கதவணை கட்ட, பல ஆண்டுக்கு முன் திட்டமிடப்பட் டது. திட்டம் நிறை வேறாததால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கிடைத்து வரும் மழை நீர், தற்போதும், வீண டிக்கப்பட்டு வருகிறது. வரும், காலங்களிலா வது, கொள்ளிடம் ஆற் றில் தண்ணீரை சேமிப்ப தற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

இங்கு தண்ணீர் தேக்கினால், பல மாவட்டங்
களின், பாசனம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை
பூர்த்தியாகும். இவ்வாறு, அவர் கூறினார். ஒவ்வொரு பருவ மழையின் போதும்,
காவிரியில் இருந்து, கடலில் வீணாக கலக்கும் நூற்றுக்கணக் கான,
டி.எம்.சி., மழை நீரை, முறையாக, சேமிப் பதற்கு, கடந்த ஆண்டு, காவிரி
தொழில் நுட்ப குழுவின் தலைவர், சுப்பிரமணியன் தலைமையில், தனிக்குழு
அமைக்கப்பட்டது. இக்குழு, காவிரியில், தடுப்பணைகள் அமைப்பது, புதிய
கதவணைகள் அமைப்பது என, பல்வேறு விதமான பரிந் துரைகளை அரசுக்கு அனுப்பியது.
மேலும், காவிரி கரைகளில், எவ்வளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன, அதனால்
என்னென்ன பிரச்சினைகள் ஏற்படு கின்றன என்பது குறித்தும், பல்வேறு
பரிந்துரை களை வழங்கியது.
பரிந்துரைகள் வழங்கி, ஆறு மாதத்துக்கு
மேல் ஆகிறது. அந்த பரிந்துரைகள் வந்த போதே, திட்டம் தீட்டி இருந்தால்,
தற்போது தென்மேற்கு பருவமழையின் போது, வீணாகும் மழைநீர்,
சேமிக்கப்பட்டிருக்கும். எனவே, இனிமேலாவது, இப்பிரச்சினையில் அரசு, தூங்
காமல் உடனடி நடவடிக்கை எடுத்தால், குடிநீருக்கு மட்டுமின்றி,
பாசனத்துக்கும் பிரச்சினை ஏற் படாமல் போகும். மேட்டூரில் அணை நிரம்பிய
பின், காவிரியி லிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை, சேலம்
மாவட்டத்தின் வறட்சி பகுதிகளுக்கு, திருப்பி விட்டால், பல ஏக்கர் நிலங்கள்
பாசன வசதி பெறும் என்பது, அம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோ ரிக்கை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 1,100 கோடி ரூபாய் மதிப்பில், அதற்கான
திட்டம் தீட்டப் பட்டது. ஆனால், இத்திட்டத்தால், பல்வேறு நடை முறை
பிரச்சினைகள் ஏற்படும் என, அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தொழில்நுட்பம் வளர்ந் துள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப் படும்
உபரி நீரை, வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடுவது, சாத்தியமாகி உள்ளது.
எனவே, வீணாக கடலில் கலக்கும் மழை நீரை, வறண்ட பகுதிகளுக்கு அனுப்ப, அரசு
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணையில் இருந்து, 5ஆம் தேதி
இரவு முதல் வினாடிக்கு, 1.06 லட்சம் கனஅடி நீர் முக்கொம்புக்கு வருகிறது.
அதில், காவிரி ஆற்றில், 32 ஆயிரம் கனஅடி; கொள்ளிடம் ஆற்றில், 75 ஆயிரம்
கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள் ளிடம் ஆற்றில், வீராணம்
ஏரிக்கு நீர் செல்லும் துணை வாய்க்கால் உட்பட,19 துணை வாய்க் கால்கள்
உள்ளன. இந்த வாய்க்கால்களுக்கு மொத்த மாக, வினாடிக்கு, 4 ஆயிரம் கனஅடி
நீர் செல்கிறது. நேற்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 71
ஆயிரம் கனஅடி கடலில் வீணாக கலக்கிறது.
வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளி
யேறினால், 24 மணி நேரத்தில், 1 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறும். இந்த
வகையில், 6 டி.எம்.சி., அளவுக்கு தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 12
டி.எம்.சி., இந்த தண்ணீரைக் கொண்டு நகரின் ஒரு ஆண்டு குடிநீர் தேவையை
சமாளிக்கலாம். கொள்ளிடத்தில் நேற்று ஒரே நாளில் சென்னை நகரின் ஆறு மாத
குடிநீர் தேவைக் கான தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. கொள்ளிடம்
ஆற்றில், நீரை தக்க வைப்பதற்கான திட்டங்களில், பொதுப் பணித்துறை
ஈடுபட்டிருந் தால், கடலில் வீணாக கலப்பது, தடுக்கப்பட்டிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக