
சர்வதேச நாடுகளில் இயங்கும் அமெரிக்க தூதரங்கள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர். அதுபற்றி தகவலறிந்த அமெரிக்க உளவுத்துறை முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தற்காலிகமாக மூடியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் லாகூரில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அதிரடி திட்டம் தீட்டியிருந்தனர். எனவே தங்களது ஊழியர்களின் உயிரை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தவிர பாகிஸ்தானுக்கு யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக