16
வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு
ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும்
காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்:
“அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?”
தன்னுடைய தந்தை மேல் காவல்துறையில்
புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் இருக்கும்போது,
தன் தந்தையை மீறி தன் காதலனை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்?
கல்யாணம் ஆகி இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது.
தன் தந்தையை கிரிமினலாக குற்றம்சாட்டி
புகார் கொடுப்பதை விட, தன் மனதுக்கு பிடித்தவனை தந்தைக்கு தெரியாமல்
திருமணம் செய்து கொள்வது தவறில்லை. அதுவே தந்தைக்கு காட்டும்
மரியாதையும்கூட.
ஏன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை?
அதைத் தடுத்தது, தடுப்பது யார்? இந்த முடிச்சை அவிழ்த்தால், இதன்
குற்றவாளிகள் யார் என்று தெரியும்?
நல்லவேளை இந்தப் பையன் தலித்தா இல்ல. இந்நேரம் தலித்தா இருந்தா…. அது அந்தப் பையனோடு மட்டும் முடியமா, ஒட்டுமொத்த தலித் மக்களை பற்றியும் இழிவா பேசியிருப்பாங்க.
நல்லவேளை இந்தப் பையன் தலித்தா இல்ல. இந்நேரம் தலித்தா இருந்தா…. அது அந்தப் பையனோடு மட்டும் முடியமா, ஒட்டுமொத்த தலித் மக்களை பற்றியும் இழிவா பேசியிருப்பாங்க.
ஆனா பாருங்க ஒருவன் தலித் இல்லைன்னு
தெரிஞ்சா போதும், மத்தப்படி அவன் என்ன ஜாதின்னு யாருக்கும் தெரிய
வேண்டியதில்ல. ஒரு தலித் செய்கிற ஒவ்வொன்றுக்கும் அவன் ஜாதியோடு
முடிச்சுப்போட்டு பார்க்கிற மனோபாவமே நீக்கமற பரம்பொருளைப் போல் எங்கும்
நிறைந்திருக்கிறது.
இதுதாங்க ஜாதி உணர்வற்ற சமூகம் (மணமகன் தேவை: ஜாதி தடையில்லை SC., ST நீங்கலாக)
*
‘இயக்குநர்கள் எல்லாம் இப்ப நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.’
ஆமா டீ.வில பாத்தேன். ரொம்ப யதார்த்தமா, இயல்பான நடிப்பு. தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்கு உயர்த்தி விட்டார்கள்.
இத பாத்து அந்தப் ‘பொறுக்கி’ பையன் பயந்து இருப்பானோ இல்லையோ, நிச்சயம் தமிழ் முன்னணி நடிகர்கள் நடிங்கிருப்பாங்க.
*
வயது வந்த ஆணும் பெண்ணும்
‘காதலுக்கு எதிர்ப்பு காப்பாற்றுங்கள்’ என்று போனால், அதுவும் வசதியான
வீட்டு காதல் பிரச்சினையாக இருந்தால் உடனே காவல்துறை ‘கவுன்சிலிங்’ பண்ண
ஆரம்பிச்சிடுறாங்க.
கவுன்சிலிங் தேவைதான். அது காதலர்களுக்கு இல்ல. காவல்துறைக்கு.
பொதுமக்களிடம் மரியாதை குறைவாக பேசாமல்;
வர்க்க வேறுபாடு, ஜாதி வேறுபாடு இல்லாமல்; சட்டப்படியும் நியாயப்படியும்
எப்படி வேலை பார்ப்பது, அப்படின்னு.
*
இதுல, சமூக பொறுப்புள்ள கோபக்கார அந்த டைரக்டர்கள் மட்டும் இல்லிங்க… ஹாலிவுட்ல இருந்து Steven Spielbergக கூட கூட்டி வரட்டும். அதனால என்ன பிரயோஜனம்?
பொண்ணு நம்ம பக்கம் இல்லியே?
பெத்தமகளே அப்பனுக்கும் ஆதரவா இல்லாபோது, இதுல மத்தவங்க ஆதரவுதான் ரொம்ப முக்கியமோ?
*
உரிய வயது வந்த காதலர்கள் சேர்ந்து வாழவோ,
பிரிந்து போகவோ முடிவெடுத்தால், அவர்களை கட்டாயப்படுத்தி பிரித்து வைக்கவோ,
சேர்த்தே வாழ வேண்டும் என்று தொல்லை செய்யவோ பொற்றோர்களுக்கே உரிமையில்லை.
ஆனால், அவர்களை பிரித்து சட்டத்திற்கு
புறம்பாக, நியாயத்திற்கு எதிராக அதில் தீவிரமாக பஞ்சாயத்து பேசுகிற
அநாகரீகமாக கருத்துச் சொல்கிற ‘கந்தசாமி’கள் மற்றும் ‘கண்ணமா’க்களின்
தொல்லை தாங்க முடியில.
அதிலும் கூடுதல் கொடுமை; ‘அது அவரின்
தனிப்பட்ட பிரச்சினை அதில் கருத்துச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை’
என்று கறாரா கருத்துவேறு சொல்கிறார்கள்.
அடப்பாவிகளா, அதை நாங்க சொல்லணும்.
அடுத்தவன் வசனத்தை பேசுறத இங்க குட் பெர்பாமென்ஸா அங்கிகரிக்கப்படுகிறது mathimaran.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக