வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஜேம்ஸ் வசந்தன் தவறான அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க திட்டம்?

தவறான வழியில் செல்லும் அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க பல அமைப்புகள் (மலையாளிகள் )அமர்ந்து கொண்டு, நம் மேலேயே பொய் வழக்கும் பதிந்து, நம்மை அடிமைகளாய் நடத்தி, சமூக ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கும் சின்ன புத்திக்காரர்களுக்கு எதிராகத்தான் இந்த கண்டனம். உயர் பதவிகள் ஒன்றும் அவர்கள் வீட்டு சொத்து அல்ல, வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு. தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள், விழிப்புணர்வு அமைப்புகளின் தலைவர்களும், செயலாளர்களும் நாளை (9th August) சென்னை Press Club அரங்கத்தில் எங்களோடு இணைந்தால் நமது குரல் பலத்து ஒலிக்கும். ஒன்று சேருவோம், உரிமையைப் பெறுவோம்! எனக் கூறியுள்ளார்.

ஒன்று கூடி குரலெழுப்ப திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தனிப்பட்ட செல்வாக்கை வைத்துக்கொண்டு உயர் அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு, என்னைப் போன்றவர்களை பொய் வழக்கில் சிக்க வைத்து வேடிக்கை பார்ப்பவரையும், அதற்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டி பல அமைப்புகள் ஒன்று கூடி குரலெழுப்ப திட்டமிட்டிருக்கிறோம். இது தனிப்பட்ட வழக்குக்கான போராட்டம் அல்ல, ஒரு பொது நோக்கோடு நடக்க இருக்கிற உரிமைப் போராட்டம். முதல்வரை தலையிடச் சொல்லி வேண்டுகோள் விடுப்போம் பேதம் பார்த்து பழகும் மண்ணல்ல இது. மொழி, இனம், மதம், ஜாதிகளையெல்லாம் தாண்டி, பரஸ்பர அன்போடு நாம் எல்லோரோடும் சகஜமாய் வசிக்கும் பூமி இது. ஆனால், நமக்கு மேலேயே அதிகாரிகளாய்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அண்மையில் அயல் வீட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, வன்கொடுமை சட்டத்தில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: