திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மாநிலங்களை பிரிக்கும்படி 50 மாநிலங்கள் கோரிக்கை? சிறிய மாநிலங்கள் வலிமையான பாரதம் ?

புதுடில்லி: தனி தெலுங்கானா மாநிலம் அறிவிப்பை தொடர்ந்து, பல மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துவிடும்.
தனி தெலுங்கானா மாநிலம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதாக, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் காரணமாக, உ.பி., அசாம் உட்பட பல மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தெலுங்கானா பிரிப்பையே அமல்படுத்த முடியுமா என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு, ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், பெரிய மாநிலங்களைப் பிரிப்பதற்கு, பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வகையில், உ.பி., "மாஜி' முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, உ.பி., மாநிலத்தை நான்கு சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். இது, வளர்ச்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என, கூறியிருந்தார். ஆனால், மேற்கு வங்க முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்தார். மாநில அரசுகள் எதுவும், மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கவில்லை. இருப்பினும், மணிப்பூரில் குகிலாந்து, மேற்கு வங்கத்தில் கமலாபூர், கர்நாடகாவை இரண்டாகப் பிரித்து மாநிலங்களை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவும், அமெரிக்கா போல வளரனுங்கறத யாரோ தப்பா புரிஞ்சுகிட்டாங்க


வலுக்கும் கோரிக்கை: பல்வேறு அமைப்புகள் சார்பிலும், தனிநபர்களும், மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என, பல்வேறு தரப்புகளில் இருந்து, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளன. மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில், கூர்க்காலாந்து, அசாமில் போடாலாந்து மாநிலங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக உள்ளது. இதே போல் பீகார், ஜார்க்கண்டில், மைதிலி மொழி பேசும் மக்களை உள்ளடக்கி மிதிலாஞ்சல் மாநிலம் உருவாக்க வேண்டும் என்றும், குஜராத்தைப் பிரித்து சவுராஷ்டிரா மாநிலம் உருவாக்கக் கோரியும் கோரிக்கைகள் பல நாட்களாக உள்ளன. கொங்கனி மொழி பேசும் மக்களை இணைத்து, கொங்கனி மாநிலம் உருவாக்க, கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு வரும் கோரிக்கைகள், எதிர்காலத்தில் வலுப்பெறும் பட்சத்தில், மாநிலங்கள் எண்ணிக்கை, 50 ஆக உயர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்தியாவில், 28 மாநிலங்களும், ஏழு யூனியன் பிரதேசங்களும் உள்ளன dinamalar .com

கருத்துகள் இல்லை: